Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திண்டுக்கல்லில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்ஆத்தூர் நீர்தேக்க உயரத்தை அதிகரிக்க முவு

Print PDF

தினமலர்                                   03.09.2012

திண்டுக்கல்லில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்ஆத்தூர் நீர்தேக்க உயரத்தை அதிகரிக்க முவு

திண்டுக்கல்:குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் இருப்பதற்காக ஆத்தூர் நீர்தேக்கத்தின் உயரத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடக்கிறது.திண்டுக்கல் நகராட்சி கூட்டம் தலைவர் மருதராஜ் தலைமையில் நடந்தது. குடிநீர் பிரச்னையை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் கூறியதாவது: ""மழை இல்லாததால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. வறண்டுபோன காவிரியிலிருந்து போதுமான தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. பேரணை செயல்படாமல் உள்ளது.

ஆத்தூர் நீர்தேக்கம் மட்டுமே தற்போதைக்கு ஆறுதல் அளிக்கிறது.இதனால்தான் மழை காலம் துவங்குவதற்கு முன்னதாகவே அதை தூர்வார வேண்டுமென்று போர்க்கால நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். தண்ணீரை பெருமளவில் உறிஞ்சிக்கொண்டிருந்த கருவேல மரங்களை வேரோடு அகற்றியுள்ளோம். வண்டல் மண் அள்ளப்பட்டு, போதுமான அளவிற்கு ஆழம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கரையை மேலும் இரண்டு அடி உயர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.