Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பண்ருட்டிக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்: அமைச்சர் உறுதி

Print PDF

தினமணி                   28.02.2013

பண்ருட்டிக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்: அமைச்சர் உறுதி

கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பண்ருட்டி நகரப் பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

பண்ருட்டி நகர அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 65-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.கூட்டத்தில் பங்கேற்று அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியது:

  • கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பண்ருட்டி நகர மக்களுக்கு குடிநீர் கிடைக்க உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பண்ருட்டி பஸ் நிலையத்துக்கு மாற்று இடம் ஆய்வு செய்யப்படும். இடப்பற்றாக்குறையில் உள்ள பண்ருட்டி பஸ் நிலையத்தை மாற்று இடத்தில் அமைக்க ஆய்வு செய்யப்படும் என்றார் அவர்.
  • நகர அம்மா பேரவைச் செயலர் ஆர்.ராமலிங்கம் தலைமை தாங்கினார். நகரச் செயலர் டி.முருகன், அவைத் தலைவர் வி.ராஜதுரை வரவேற்றனர். நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம், முன்னாள் மேலவை உறுப்பினர் அ.ப.சிவராமன், அம்மா பேரவை துணைச் செயலர் பி.மாணிக்கம், முன்னாள் கவுன்சிலர்கள் என்.செல்வம், வி.ஏ.ஆர்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  • மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணைச் செயலர் டாக்டர் ஆர்.கவிதா, தலைமைக் கழகப் பேச்சாளர் சோமு.மணி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
  • நகர இளைஞரணி பொருளர் எஸ்.கலைமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  • பண்ருட்டி ஒன்றியம்: இதேபோல் பண்ருட்டி ஒன்றியக் கழகம் சார்பில் புறங்கனி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது.
  • பண்ருட்டி ஒன்றிய செயலர் என்.கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் கி.தேவநாதன் வரவேற்றார்.
  • நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், தலைமைக் கழகப் பேச்சாளர் விஜயா தைலான் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
  • அட்மா குழுத் தலைவர் இராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் வேல்முருகன், முத்தமிழ்செல்வி, புருஷேத்தமன், இந்திரா வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் கிளை கழகச் செயலர் கே.ஆறுமுகம் நன்றி கூறினார்.
Last Updated on Friday, 01 March 2013 10:34