Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் பிரச்னை தீர்க்க ரூ.2.12 கோடியில் பணி

Print PDF
தினமலர்        30.03.2013

குடிநீர் பிரச்னை தீர்க்க ரூ.2.12 கோடியில் பணி


ஓசூர்: ""ஓசூர் நகராட்சியில் போர்கால அடிப்படையில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க, இரண்டு கோடியே, 12 லட்சம் ரூபாய் மதிப்பில், குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நகராட்சி தலைவர் பாலகிருஷ்ணரெட்டி வெளியிட்ட அறிக்கை:

ஓசூர் நகராட்சியில், குடிநீர் பிரச்னை பரவலாக இருந்து வருகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க போர்கால அடிப்படையில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில், 30 ஆழ்துளை கிணறுகள் போடப்படுகிறது.

மின்தடை ஏற்படும்போது தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய பேரண்டப்பள்ளி, குமுதேப்பள்ளி, சமத்துவபுரம் நீருந்து நிலையங்களில், 22 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 100 கே.வி.ஏ., திறன் கொண்ட மூன்று சென் செட் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்னை அதிகமாக உள்ள வார்டுகளில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில், 30 புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்து, மின் மோட்டார்கள் பொறுத்தப்பட உள்ளது. குடியிருப்புகளுக்கு தனியார் லாரிகள் மூலமும் குடிநீர் வினியோகம் செய்ய, 24 லட்சத்து, 50 ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் வரும் வரை, குடிநீர் தடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்க நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.