Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு

Print PDF
தினமணி         31.03.2013

குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு


கோத்தகிரியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என கோத்தகிரி பேரூராட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோத்தகிரி பேரூராட்சி மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவர் சை.வாப்பு தலைமை வகித்தார். செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் சுந்தரி வரவேற்றார். இதைத் தொடர்ந்து, கூட்டத்தில் நடந்த விவாதம்:

ராஜேஷ்வரி வடிவேல் (மதிமுக): கோத்தகிரியில் உள்ள காம்பாய்க்கடை, பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதால், குடிநீர் மாசுப்படுகிறது என்றார்

தலைவர் சை.வாப்பு: குடிநீர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்படும், நீரோடைகள் சுத்தகரிக்கப்படும்.

சுகாதார ஆய்வாளர் கண்ணன்: குடிநீர் பிரச்னையை தீர்க்க புதிய கிணறுகள் வெட்டப்படும். பழுதடைந்த குழாய்களை அப்புறப்படுத்தி புதிய குடிநீர் குழாய்கள் பொருத்தப்படும்.

மணி (அதிமுக): நடைபாதை மேம்பாலம் அமைக்க வெல்டிங் வேலைக்கு ஆகும் மின் செலவை பேரூராட்சி ஏற்றுக்கொள்ளக் கூடாது.

தலைவர்: நடைபாதை மேம்பாலம் அமைக்க செலவாகும் மின் கட்டணத்தை ஒப்பந்ததாரரே செலுத்தி விடுவார்.

கேஏபி.சீனிவாசன் (அதிமுக), சரவணன்(காங்), தங்கேஷ் (திமுக): கோத்தகிரியில் அனுமதியில்லாத கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோபால்(சுயே),சிவக்குமார்(தேமுதிக): மார்க்கெட் கடைகளுக்கு வாடகை உயர்த்த வேண்டும்.

தலைவர்: அனுமதியில்லாத கட்டடங்களை இடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மார்க்கெட் கடை வாடகை உயர்த்த ஆலோசிக்கப்படும். நடைபாதையில் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு தடை விதிக்கப்படும் என்றார்.