Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோடையை சமாளிக்க குடிநீர் வாரியம் பகீரத முயற்சி ஏரிகளில் நீர் இருப்பு 44 சதவீதம் குறைந்தது

Print PDF
தினமலர்        18.04.2013

கோடையை சமாளிக்க குடிநீர் வாரியம் பகீரத முயற்சி ஏரிகளில் நீர் இருப்பு 44 சதவீதம் குறைந்தது


சென்னை:சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் ஏரிகளின் நீர் இருப்பு, 44 சதவீதம் குறைந்துள்ளதால், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என, தெரிகிறது. அதை சமாளிக்க குடிநீர் வாரியம், பகீரத முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து, குடிநீர் வாரிய மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஏரிகளில் தற்போதுள்ள தண்ணீர் இருப்பை கணக்கிடும் போது, இரண்டரை மாதங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு வராது.

அதற்குள் மழை பெய்யா விட்டால், அடுத்தடுத்த மாதங்களில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனாலும், அதை சமாளிக்க பலகட்ட முயற்சிகள் எடுத்து வருகிறோம்.

நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம், 6 கோடி லிட்டர் பெறப்பட்டு வருகிறது. ஒரு மாதத்திற்குள், 10 கோடி லிட்டராக உயரும். நெய்வேலியில் உள்ள, 45 கிணறுகள் சீரமைக்கப்பட்டு, அங்கிருந்து, ஒரு மாதத்தில், 4 கோடி லிட்டரும், அடுத்தடுத்த மாதங்களில், 9 கோடி லிட்டர் குடிநீரும் பெறப்படும்.

ஆந்திராவில், உப்பள படுகையில் நடக்கும் பராமரிப்பு பணிகள், ஒன்றரை மாதத்தில் முடிந்து, தண்ணீர் கிடைக்கும். இதன் மூலம், ஓரளவு தட்டுப்பாடின்றி சமாளிக்க முடியும். இருந்தபோதிலும், வருண பகவான் கைகொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.