Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெகமத்தில் ரூ.8.83 கோடியில் புதிய பம்ப்பிங் ஸ்டேஷன்

Print PDF

தினமலர்               29.04.2013 

நெகமத்தில் ரூ.8.83 கோடியில் புதிய பம்ப்பிங் ஸ்டேஷன்

நெகமம் : நெகமம் பேரூராட்சி பகுதியில் அம்பராம்பாளையம் குடிநீர் திட்டத்தில், எட்டு கோடியே 83 லட்சம் ரூபாய் செலவில் பம்ப்பிங் ஸ்டேஷன் அமைக்கப்படவுள்ளது.

நெகமம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் ஒன்பதாயிரத்து 600 பேர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதிக்கு அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில், தினமும் ஆறு லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் குடிநீர் வடிகால் வாரியம் வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தம்.

ஆனால், தினமும் இரண்டு லட்சம் தண்ணீர் மட்டுமே வழங்கி வருவதால், பேரூராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதுகுறித்து பேரூராட்சித் தலைவர் சோமசுந்தரம், மாவட்ட கலெக்டருக்கும், பேரூராட்சிகளின் உதவி இயக்குனருக்கும் கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில், அம்பராம்பாளையம் குடிநீர் திட்டத்தில் இருந்து, புதிய இணைப்பு நெகமம் பேரூராட்சிக்கு வழங்க குடிநீர் வடிகால் வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டது.

இதற்கு, ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் எட்டு கோடியே 83 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நெகமம் பேரூராட்சிக்கு புதிய பைப் லைன் பதித்து தண்ணீர் வினியோகம் செய்வதற்கு, பம்ப்பிங் ஸ்டேஷன் பொள்ளாச்சியை அடுத்துள்ள தாளக்கரையில் குடிநீர் வடிகால் வாரியம் அமைக்க திட்டமிட்டது.

இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதை வேளாண்மைத் துறை அமைச்சர் தாமோதரன் துவக்கி வைத்தார். இதில், பொள்ளாச்சி எம்.எல்.ஏ., முத்துக்கருப்பண்ணசாமி, பொள் ளாச்சி எம்.பி., சுகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.