Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

10 ஆண்டுகளாக பழுதான குடிநீர் குழாய் மாற்றம்

Print PDF
தினமணி        06.05.2013

10 ஆண்டுகளாக பழுதான குடிநீர் குழாய் மாற்றம்


காஞ்சிபுரத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழுதான நிலையில் இருந்த குடிநீர் குழாய் அகற்றப்பட்டு புதிய குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்துக்கு பாலாறு மற்றும் திருப்பாக்கடல் குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது. காஞ்சிபுரம் மக்களுக்கு நாள் ஒன்றுக்குத் தேவைப்படும் மொத்தக் குடிநீர் அளவில் 120 லட்சம் லிட்டர் குடிநீர் வேலூர் மாவட்டம் திருப்பாக்கடல் குடிநீர் திட்டத்தின் மூலம் சமாளிக்கப்படுகிறது.

மீதமுள்ள 80 லட்சம் லிட்டர் குடிநீர், பாலாற்று குடிநீர் திட்டத்தின் மூலம் கொண்டு வரப்படுகிறது.

திருப்பாக்கடலில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் இருந்து பைப்லைன் மூலம் கொண்டு வரப்படும் குடிநீர், பிள்ளையார்பாளையம் வேகவதி ஆற்றங்கரையில் உள்ள கீழ் நிலைக் குடிநீர் தொட்டியில்(சம்ப்) குடிநீர் தேக்கி வைக்கப்படுகிறது. அங்கிருந்து கிருஷ்ணன் தெரு வழியாக குழாய் மூலம் நகரின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

இதற்காக கிருஷ்ணன் தெருவில் பிரதான பைப் லைன் சந்திப்பு கடந்த 1990-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்த சந்திப்பில் இருந்து ஒரு பகுதியாக சின்னகாஞ்சிபுரம், மற்றொரு பகுதி வழியாக பெரியகாஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் குடிநீர் தேக்கப்பட்டு நகரில் உள்ள 25 ஆயிரம் வீட்டு குடிநீர் இணைப்புகள் மற்றும் தெருக்குழாய் இணைப்புகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது.

பைப்லைன் சந்திப்பில் பழுது: இந்நிலையில் கிருஷ்ணன் தெருவில் உள்ள பிரதான பைப்லைன் சந்திப்பில் ஓட்டை விழுந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதான நிலையில் இருந்தது. அவ்வப்போது பழுது சரி செய்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் 520 மி.மீ. விட்டம், 1.5 மீட்டர் நீளம் கொண்ட பைப்லைன் சந்திப்பு சல்லடை போல ஓட்டை விழுந்தது. இதனால் கடந்த சில நாள்களாக குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் 520 மி.மீ. விட்டம், 1.5 மீட்டர் நீளம் கொண்ட புதிய பைப்லைன் ராணிப்பேட்டையில் இருந்து புதிதாக வாங்கிவரப்பட்டு பொறுத்தும் பணி 3 நாட்கள் நடைபெற்றது.