Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவில்பட்டியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 2வது பைப் லைன் திட்டப்பணி தொடக்கம் 18 மாதங்களில் முடிக்க திட்டம்

Print PDF
தினகரன்         16.05.2013

கோவில்பட்டியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 2வது பைப் லைன் திட்டப்பணி தொடக்கம் 18 மாதங்களில் முடிக்க திட்டம்


கோவில்பட்டி, : கோவில்பட்டியில் ரூ.82 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இரண்டாவது குடிநீர் பைப்லைன் திட்ட பணிகள் பூமி பூஜையுடன் தொடங் கியது. 18 மாதங்களில் இப்பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இருந்து கோவில்பட்டி நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப் படுகிறது. சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம் 35 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டதால், வழிப்புற குழாய்களில் அடிக்கடி உடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. மேலும், நகரின் மக்கள் தொகையும் ஒரு லட்சமாக உயர்ந்துள்ளதால் குடிநீர் தேவையும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து, கோவில்பட்டி இரண்டா வது பைப் லைன் திட்டத் திற்கு ரூ.82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டம் மத்திய அரசின் 80 சதவீதம் மானியம், மாநில அரசின் 10 சதவீதம் மானியம் மற்றும் உள்ளாட்சி பங்கு தொகை 10 சதவீதம் ஆகியவற்றின் மூலம் நிறைவேற்றப்பட உள்ளது.

இத்திட்டத்திற்காக சீவலப்பேரி கிராமத்தின் அருகே தாமிரபரணி ஆற்றில் 4.5 மீட்டர் விட்டமுள்ள 4 நீர் உறிஞ்சு கிணறுகள் அமைக்கப் படுகிறது. 9.65 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து 22.59 கிலோ மீட்டர் நீளம் இரும்பு குழாய் மூலம் நீர் உந்தப்பட்டு, இள வேலங்கால் கிராமத்தின் அருகில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் சேகரிக்கப் படுகிறது. அங்கிருந்து 28.56 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்படும் இரும்பு குழாய்கள் மூலம் கோவில்பட்டி நகராட்சியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் சேகரிக்கப்பட உள்ளது.இத்தொட்டியில் இருந்து நகரில் உள்ள 12 மேல்நிலை தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்பட்டு விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தின் காலம் 18 மாதங்கள் என நிர்ணயிக்கப்பட்டு வரும் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் முடிக்க உத்தேசிக்கப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவில்பட்டி இரண்டாவது குடிநீர் பைப் லைன் திட்டத்தை சில நாட் களுக்கு முன்பு சென் னையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், இத்திட்டத்துக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. கோவில்பட்டி பார்க் ரோட்டில் அமைந்துள்ள குடிநீர் வடிகால் வாரிய நீரேற்று நிலையத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் நகராட்சி தலைவன் ஜான்சிராணி, இரண்டாவது பைப்லைன் திட்ட பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

 இதில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் குத்தாலிங்கம், உதவி நிர்வாக பொறியாளர்கள் பாலசுப்பிர மணியன், லட்சுமணன், உதவி பொறி யாளர்கள் பிரியதர்ஷினி, விஜயபாலா, நகராட்சி கமிஷனர் வரதராஜன், பொறியாளர் சுப்புலட்சுமி, நகர அதிமுக செயலாளர் சங்கர பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.