Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வைகை குடிநீர் குழாய்களில் கசிவு; மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் 2 நாட்கள் நிறுத்தம்

Print PDF
தினத்தந்தி          11.06.2013

வைகை குடிநீர் குழாய்களில் கசிவு; மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் 2 நாட்கள் நிறுத்தம்


வைகை அணையில் இருந்து வரும் மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் குழாய்களில் பல இடங்களில் கசிவு ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்வதற்கான மராமத்து பணிகள் 2 நாட்கள் நடப்பதால் மதுரை நகரில் பல்வேறு இடங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

குடிநீர் குழாய்களில் கசிவு

மதுரை மாநகராட்சிக்கு வைகை அணையில் இருந்து குடிநீர் பெறப்படுகிறது. இதற்காக பிரதான குழாய் அமைக்கப்பட்டிருக்கிறது. வைகை அணையில் இருந்து மதுரை வரும் வழியில் இந்த குழாய்கள் பூவம்பட்டி மேல்நிலைத்தொட்டி, கண்ணாபட்டி, அக்கரைப்பேட்டை(நீர் அழுத்த முறிவுத்தொட்டி அருகில்), நடகோட்டை, மண்ணாடிமங்கலம் எலக்ட்ரிக் டவர், வாழைத்தோப்பு அருகில், கொடிமங்கலம் மற்றும் தாராபட்டி பிரிவு ஆகிய இடங்களில் உள்ள குழாய்களில் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.

எனவே குழாயில் பழுது பார்க்கும் பணிகள் வருகிற வியாழன், வெள்ளிக்கிழமை(13, 14–ந்தேதி)களில் நடக்கிறது.

விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்

எனவே அந்த நாட்களில் மதுரை நகரில் 1–வது மண்டலத்தை சேர்ந்த எச்.எம்.எஸ். காலனி, அருள்தாஸ்புரம் ஆகிய இடங்களில் உள்ள மேல்நிலை தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்படும் பகுதிகளான மாநகராட்சி வார்டு எண் 5, 6, 7, 9, 10, 19, 20 ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.

2–வது மண்டலத்தை சேர்ந்த செல்லூர், ரேஸ்கோர்ஸ், ஏ.ஆர். டேங்க், புதூர் மருதங்குளம் மேல்நிலைத்தொட்டி, ராஜாஜி பார்க் மேல்நிலைத்தொட்டி, அண்ணாநகர், கே.கே.நகர், ஆகிய மேல்நிலைத்தொட்டிகளில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்படும் மாநகராட்சி வார்டுகள் 27, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48 ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் 2 நாட்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது.

3–வது மண்டலத்தை சேர்ந்த வில்லாபுரம் மேல்நிலைத்தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்படும் மாநகராட்சி வார்டுகள் 61, 62, 63, 64 ஆகிய பகுதிகளிலும் குடிநீர் 2 நாட்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது.

4–வது மண்டலத்தை சேர்ந்த சுந்தரராஜபுரம் மேல்நிலைத்தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்படும் மாநகராட்சி வார்டுகள் 77, 87, 88, 89, 90, 91, 92, 93 ஆகிய வார்டுகளிலும் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.