Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம்ஏரி திறப்பு

Print PDF

தினபூமி             17.08.2013

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம்ஏரி திறப்பு

http://www.thinaboomi.com/sites/default/files/Jaya1(C)_100.jpg 

சென்னை, ஆக. 17 - சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியிலிருந்து இன்று முதல் நாளொன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கு வகை செய்ய புைதிய வீராணம் திட்டம்ூ எனது தலைமையிலான அரசால் 2004-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடும் போது அந்தத் தண்ணீர் வீராணம் ஏரியில் பெறப்பட்டு, அப்பகுதியின் பாசனத்திற்கு பயன்படுவதோடு மட்டுமல்லாமல், சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.

காவேரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 2.8.2013 முதல் தண்ணீர் திறந்து விட நான் உத்தரவிட்டிருந்தேன். தற்போது, மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதன் காரணமாக வீராணம் ஏரியில் 935.20 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

எனவே, வீராணம் ஏரியிலிருந்து இன்று (17.8.2013) முதல் சென்னை மாநகர குடிநீருக்காக நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் திறந்து விட நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் கிடைக்க வழிவகை ஏற்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.