Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

படப்பை அருகே இரண்டு இடங்­களில் பாலாறு குழாய் உடைப்பு மீண்டும் குடிநீர் வினி­யோகம் பாதிப்பு

Print PDF

தினமலர்             03.10.2013

படப்பை அருகே இரண்டு இடங்­களில் பாலாறு குழாய் உடைப்பு மீண்டும் குடிநீர் வினி­யோகம் பாதிப்பு

தாம்­பரம்:படப்பை அருகே கேபிள் புதைக்­கப்­பட்ட போது, பாலாறு குழாயில் இரண்டு இடங்­களில் ஏற்­பட்ட உடைப்பை சரி­செய்யும் பணி நடந்து வரு­கி­றது. இதனால், கடந்த மூன்று நாட்­களாக குடிநீர் வினி­யோகம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

தாம்­பரம் பல்­லா­வரம் கூட்டுக் குடிநீர் திட்­டத்தின் மூலம், பாலாற்றில் பழைய சீவ­ரத்தில் ஆழ்­துளை கிணறு அமைத்து, தாம்­பரம், பல்லா­வரம், சிட்ல­பாக்கம், திரு­நீர்­மலை உள்­ளாட்சி பகு­திகள், சான­டோ­ரியம் ஏற்­று­மதி வளாகம் ‘மெப்ஸ்’, வண்­டலுார் உயி­ரியல் பூங்கா உள்­ளிட்ட இடங்­க­ளுக்கு குடிநீர் வினி­யோ­கிக்­கப்­படு­கி­றது.

அடிக்கடி உடைப்பு

அதற்­கான குழாய், வண்டலுார் வாலா­ஜாபாத், தாம்­பரம் முடிச்சூர் சாலைகள் வழியாக வருகி­றது. இந்த குழாய், பல ஆண்டு­க­ளுக்கு முன் பதிக்­கப்­பட்­டது என்­பதால், அடிக்­கடி உடைந்து விடுகிறது.

இதனால், சீரான குடிநீர் வழங்­கு­வதில் சிக்கல் ஏற்­பட்டு வருகிறது. இந்த நிலையில், வண்டலுார் வாலா­ஜாபாத் சாலை ஓரத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம், தனியார் நிறு­வ­னத்­தினர் கேபிள் புதைத்தனர்.

அப்­போது, வஞ்­சு­வாஞ்­சேரி மற்றும் செரப்­ப­ணஞ்­சேரி பகு­தி­களில் மூன்று இடங்­களில், குழாயை உடைத்­தனர்.

இதில், 11 குழாய்கள் சேதம் அடைந்­தன. இதனால், 15 நாட்­க­ளுக்கு மேல் குடிநீர் வினி­யோகம் பாதிக்­கப்­பட்டது.

அதி­கா­ரிகள், 10 நாட்கள் இரவு, பக­லாக போராடி உடைப்பை சரி­செய்­தனர்.

இந்த நிலையில், ஏற்­க­னவே குழாய் உடைக்­கப்­பட்ட இடத்­திற்கு அருகே, கடந்த 30ம் தேதி, இரண்டு இடங்­களில் தண்ணீர் அதிக அளவு வெளி­யே­றி­யது.

ரூ. 15 லட்சம் அபராதம்

அங்கு தனியார் நிறு­வனம் கேபிள் புதைக்கும் போது, குழாய் உடைந்தது தெரி­ய­வந்­தது.
இதை­ய­டுத்து, உடைப்பை சரி­செய்யும் பணி தீவி­ர­மாக நடந்து வரு­கி­றது. இதனால், கடந்த மூன்று நாட்­க­ளாக குடிநீர் வினி­யோகம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

இதுகுறித்து, குடிநீர் வாரிய அதி­கா­ரி­க­ளிடம் கூறியதாவது:

இடங்­களில் குழாய் உடைத்­த­தற்கு, அப­ராத தொகை­யாக 15 லட்சம் ரூபாய் விதிக்­கப்­பட்­டு உள்ளது. அதை சம்­பந்­தப்­பட்ட நிறு­வனம் இது­வரை செலுத்­த­வில்லை.

இந்த நிலையில், கூடு­த­லாக இரண்டு இடங்­களில் உடைக்­கப்­பட்­டுள்­ளது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. அதற்கும் அப­ராதம் விதிக்­கப்­படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.