Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்சியில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து மாநகராட்சி ஆணையர் தண்டபாணி தகவல்

Print PDF

தினத்தந்தி            07.10.2013

திருச்சியில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து மாநகராட்சி ஆணையர் தண்டபாணி தகவல்

திருச்சியில்  (செவ்வாய்க்கிழமை) குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் தண்டபாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

நாளை குடிநீர் வினியோகம் ரத்து

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம், அய்யாளம்மன் படித்துறை பொன்மலை கூட்டுக்குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையம் மற்றும் ஜீயபுரம், பிராட்டியூர் கூட்டுக்குடிநீர் திட்ட நிலையம் ஆகிய இடங்களில் உள்ள தலைமை நீரேற்று நிலையங்களுக்காக உள்ள கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதையொட்டி கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் மரக்கடை, விறகுபேட்டை, உறையூர், மலைக்கோட்டை, சிந்தாமணி ஆகிய பகுதிகளிலும், பெரியார் நகர், கலெக்டர் வெல் நிலையத்தில் அடங்கும் தில்லைநகர், அண்ணா நகர், புத்தூர், காஜாபேட்டை, கண்டோன்மெண்ட், ஜங்ஷன், உய்யகொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்கநகர், ஆல்பா நகர், பாத்திமா நகர், கருமண்டபம் மற்றும் காஜாமலை காலனி ஆகிய பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை)ஒரு நாள் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது.

கே.கே.நகர் பகுதி

இதேபோல பொன்மலை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் அடங்கும் அரியமங்கலம் பகுதி, மேலகல்கண்டார் கோட்டை, பொன்னேரிபுரம், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், பொன்மலைப்பட்டி, மத்திய சிறைச்சாலை, சுப்ரமணியபுரம், விமானநிலைய பகுதி, செம்பட்டு, கல்லுக்குழி, காஜாநகர், காஜாமலை, கிருஷ்ணமூர்த்தி நகர், தொண்டைமான் நகர், அன்புநகர் ஆகிய பகுதிகளிலும், பிராட்டியூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் அடங்கும் ராம்ஜிநகர், பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதூர், கே.கே.நகர், எல்.ஐ.சி. காலனி, விஸ்வநாதபுரம், கே.சாத்தனூர், தென்றல் நகர், விஸ்வாஸ் நகர், ஆனந்த் நகர் மற்றும் சுப்ரமணிய நகர் ஆகிய பகுதிகளிலும் நாளை ஒரு நாள் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது.

நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் வழக்கம் போல குடிநீர் வினியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.