Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பள்ளிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கல்விக்குழு கூட்டத்தில் முடிவு

Print PDF

தினகரன்            31.12.2013

மாநகராட்சி பள்ளிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கல்விக்குழு கூட்டத்தில் முடிவு

திருச்சி, : திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி கல்விக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநகராட்சியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க சுத்திகரிப்பு கருவி பொருத்த  முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியின் கல்விக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கல்விக்குழு தலை வர் கவுன்சிலர் பூபதி தலைமை வகித்தார். நகரபொறியாளர் சந்திரன் முன் னிலை வகித்தார். கூட்டத் தில் திருச்சி மாநகராட்சி யில் உள்ள 79 மாநகராட்சி பள்ளிகளுக்கும் ரூ 8.48 கோடி யில் வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகி றது. இது போல பள்ளிகள் அனைத்திற்கும் தேவை யான தீய ணைப்பு கருவிகள், பொருத்துதல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க சுத்திகரிப்பு கருவி பொருத்துல், மாநகராட்சி பள்ளிகள் அனைத்திற்கும் துப்புரவு பணியை தனியாரிடம் ஓப்படைத்து கழிப்பிடம் பராமரிப்பு உள் ளிட்ட பணிக ளை செய்வது, இரவு நேரங்களில் பாதுகாப்பிற்கு தனியார் நிறுவனம் மூலம் காவலாளிகளை நியமிப் பது. பள்ளிக்கு அனை த்து தேவையான உபகரணங்கள் வாங்குவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது. கல்விக்குழு கூட்டத்தில் கல்விக்குழு கூறுப்பினர்கள் முஸ்தபா, ரவிசங்கர். வனிதா அன்புலெட்சுமி, பாஸ்கர், கலைவாணன் உள்பட மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.