Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஓராண்டில் நிறைவடையும்: அமைச்சர்

Print PDF

தினமணி 23.12.2009

தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஓராண்டில் நிறைவடையும்: அமைச்சர்

விருதுநகர், டிச. 22: விருதுநகர் மாவட்டத்தில் நிலவும் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காணும் விதத்தில் ரூ.600 கோடி மதிப்பீட்டில் தாமிரபரணி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு, கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இம் மாவட்ட மக்களுக்கான குடிநீர்த் திட்டத்தை உரிய முறையில் நிறைவேற்ற அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.

இங்கு மாவட்டத்தில் உள்ள 7 பேரூராட்சிகள், 1457 ஊரகக் குடியிருப்புகளுக்கு தாமிரபரணி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு, செயல்படுத்தவுள்ள கூடடுக் குடிநீர்த் திட்ட விளக்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியது:

குடிநீர்ப் பிரச்னை மிகுந்த மாவட்டம் என்ற குறையைப் போக்கும விதத்தில், செயல்படுத்தவிருக்கும் இத் திட்டம் மிகப் பெரிய காரியமாகும். கிராமஙகளுக்கு குடிநீர் வரவில்லை என்ற குறை இருக்காத விதத்தில், தொழில்நுட்ப பாதிப்புகளைத் தவிர்க்கும் விதத்தில், இத் திட்டம் மூனறு பிரிவாகப் பிரித்து செயல்படுத்துகிறது.

தாமிரபரணி நீராதாரத்திலிருந்து நீரை உறிஞ்சக் கிணறுகளை அமைத்து, தண்ணீர் எடுக்கப்பட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் அமைக்கப்படவுள்ள தரைமட்டத் தொட்டியில் விடப்படும். இப் பணிக்கு குடிநீர் வடிகால் வாரியம் கட்டணம் ஏதும் வசூலிக்காது.

பின்னர் அநதந்த ஊராட்சிகள் திட்டமிட்டு, தொட்டியிலிருந்து குடிநீரை விநியோகிக்க வேண்டும். இத் திட்டச் செயல்பாட்டில் நடைமுறை சிக்கல்களைத் தவிர்ககும் விதத்தில, முன்கூட்டியே விவாதித்து அமல்படுத்தபபடுகிறது.

இத் திட்டம் மூலம் கிராமங்களுக்கு முறையாக குடிநீர் விநியோகித்தால், தற்போது பொறுபபிலுள்ள ஊராட்சித் தலைவர்களுக்குப் பெருமை சேர்ப்பதாக அமையும். இதற்கேற்ப அனைத்துத் தரப்பினர் ஒத்துழைப்புடன், ஊராட்சிகளில் திட்டப் பணிகளைச் செய்ய வேண்டும்.

உள்ளூரில் கிடைக்கும் தண்ணீர் குளித்தல் உள்ளிட்ட தேவைகளுக்கும் தாமிரபரணி தண்ணீர் குடிப்பதற்கெனப் பயன்படுத்த வேண்டும். மேலும் பேரூராட்சிப் பகுதிகளில் தினசரி ஒருவருக்கு 40 லிட்டர் குடிநீர், ஊரகக் குடியிருப்புப் பகுதிகளில் 30 லிட்டர் குடிநீர் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மொத்த குடிநீர்த் தேவை 50.38 மில்லியன் லிóட்டர். விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்கும் விதத்தில் இத் திட்டம் அமையும் என்றார் அமைச்சர்.

கூட்டத்தில் வருவாய்த் துறை அதிகாரி பா.கணேசன், குடிநீர் வடிகால் வாரியப் பொறியாளர்கள் தி.சம்பத், ச.முருகேசன், இரா.ஜெயபால் ஆகியோர் திட்டம் குறித்து விளககினர். உதவிப் பொறியாளர் ச.தமிழ்ச்செல்வி நனறி கூறினார்.