Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நவம்பர் வரை குடிநீர் பிரச்னை இருக்காது

Print PDF

தினகரன் 08.02.2010

நவம்பர் வரை குடிநீர் பிரச்னை இருக்காது

சென்னை : சென்னையில் தண்டை யார்பேட்டை, வண்ணாரப் பேட்டை, திருவொற்றியூர், ஜார்ஜ்டவுன், பூங்காநகர், சேத்துப்பட்டு, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, திரு வல்லிக்கேணி, மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, பெசண்ட்நகர், திருவான் மியூர் ஆகிய பகுதிகள் மணற்பாங்கானவை.

கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, வியாசர்பாடி, பெரம் பூர், வில்லிவாக்கம், கொளத் தூர், செம்பியம், பெரியார் நகர், அயனாவரம், கீழ்ப்பாக் கம், புரசைவாக்கம், அண்ணாநகர், முகப்பேர், கோயம்பேடு, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக் கம், தியாகராயர் நகர், சைதாப்பேட்டை, மாம் பலம், கே.கே.நகர் ஆகிய பகுதிகள் களிமண் தன்மை கொண்டவை.

கிண்டி, கோட்டூர்புரம், பரங்கிமலை, வேளச்சேரி, தரமணி ஆகிய பகுதிகள் கடினப்பாறைப் பகுதிகள்.
வடகிழக்குப் பருவகாலம் டிசம்பர் வரைதான் இந்த முறை மழை பெய்தது. ஜனவரியில் லேசாக மட் டுமே மழை பெய்தது.

பருவகாலத்துக்கு முன்பு, தரையிலிருந்து நீர்மட்ட ஆழம் மணற்பகுதியில் 5 மீட்டராகவும் களிமண் பகுதியில் 5.5 மீட்டராகவும் பாறைப்பகுதியில் 5.1 மீட்டராகவும் இருந்தது. இதுவே மழைக்குப் பிறகு, டிசம்பரில் முறையே 2.7 மீ, 1.6 மீ, 1.8 மீ என நீர்மட்டம் மேலே வந்தது.

பருவகாலம் முடிந்து, மீண்டும் ஆய்வு செய்யப்பட் டது. இதில், கோடம்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சராசரியாக 2 மீட்டர் ஆழத்தில் நீர்மட்டம் உள்ளது. ராயபுரம், வண் ணாரப்பேட்டை, பூங்காநகர் ஆகிய பகுதிகளில் 3.7 மீட்டர் ஆழத்துக்கு நீர்மட் டம் சென்றுவிட்டது கண்டறியப்பட்டுள்ளது.

நகரில் கடந்த ஆண்டை விட நீர்மட்டம் 0.38 மீட்டர் அதாவது 1.25 அடி குறைந்துவிட்டது என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் சென்னைக்கு குடிநீர் வழங் குவதில் பிரச்னை இருக் காது என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின் றனர். சென்னையின் ஒரு நாள் குடிநீர்த் தேவை 30 மில்லியன் கன அடி குடிநீர். நேற்றைய நிலவரப்படி, நான்கு குடிநீர் ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 6,691 மில் லியன் கன அடி நீர் உள்ளது. இதை வைத்து வரும் நவம்பர் வரை சென்னையின் குடி நீர்த் தேவையை சமாளிக்க முடியும் என்று குடிநீர் வாரிய தலைமைப்பொறி யாளர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

Last Updated on Monday, 08 February 2010 11:24