Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை: திண்டுக்கல் நகராட்சி மக்கள் தவிப்பு : ரூ.100 கோடி காவிரி திட்டம் வீணானது

Print PDF

தினமலர் 15.02.2010

12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை: திண்டுக்கல் நகராட்சி மக்கள் தவிப்பு : ரூ.100 கோடி காவிரி திட்டம் வீணானது

திண்டுக்கல் : திண்டுக்கல் நகருக்கு குடிநீர் வழங்க மூன்று திட்டங்கள் இருந்தும் 12 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் நகராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, காமராஜர் காலத்தில் ஆத்தூர் திட்டம் துவக்கப்பட்டது.இந்த திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு 80 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே எடுக்க முடியும். வழியோர கிராமங்களின் குடிநீர் தேவை போக 50 லட்சம் லிட்டர் தண்ணீர் தான் திண்டுக்கல் வருகிறது.

பகிர்மான குழாயில் உள்ள உடைப்பால் இந்த தண்ணீர் வினியோகத்திலும் குளறுபடி நடக்கிறது.ஆத்தூர் திட்டத்திலிருந்து போதிய தண்ணீர் கிடைக்கவில்லை என்று கூறி பேரணை பகுதியில் கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யும் பேரணை திட்டம் 40 லட்ச ரூபாய் செலவில் தீட்டப்பட்டது.இதன் மூலம் திண்டுக்கல் நகருக்கு நாள் ஒன்றுக்கு 50 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வர திட்டமிடப்பட்டது.

தண்ணீரே வராத பேரணை பகுதியிலிருந்து தண்ணீர் எடுப்பதற்காக பொருத்தப்பட்ட மோட் டார்கள் அடிக்கடி பழுதாவதாக கூறி நகராட்சியும் பல லட்சங்களை செலவழித்து வருகிறது. ஆனால்

திண் டுக்கல்லுக்கு இந்த திட்டத்தின் மூலம் மட்டும் தண்ணீர் வந்து சேரவில்லை.காவிரி காலை வாரியது: திண்டுக்கல் நகராட்சிக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக 100 கோடி ரூபாய் செலவில் 2001ல் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் துவக்கப்பட்டது.இந்த திட்டம் 2003ல் கான்ட்ராக்ட் விடப்பட்டு, 2007ல் செயல்பாட்டிற்கு வந்தது.

இந்த திட்டத்தின் கீழ் கரூர் காவிரி ஆற்றில் ரங்கநாதன் பேட்டை,புதுப்பாளையம் ஆகிய இடங்களில் கிணறுகள் தோண்டப்பட்டு,நாள் ஒன்றுக்கு 195 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.வழியோர கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்தது போக திண்டுக்கல்லுக்கு 80 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது.12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர்:திண்டுக்கல் நகராட்சி மக்களுக்கு 12 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.ஆத்தூர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம்செய்யும் போது கூட 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைத்தது. தற்போது பெரிய திட்டமாகிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் இருந்தும் 12 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் கிடைக்கிறது.துணை முதல்வர் கூறியது என்ன: திண்டுக்கல்லில் கடந்த ஆண்டு நடந்த விழாவிற்கு வந்த துணை முதல்வர் ஸ்டாலின், திண்டுக்கல் நகராட்சிநிர்வாகம் மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் என்று அறிவித்தார்.ஆனால் அவர் அறிவித்து சென்று ஓராண்டாகியும் மழை காலத்தில் கூட மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் இல்லை என்பது தான் வருத்தமான விஷயம்.

Last Updated on Monday, 15 February 2010 07:35