Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் குழாயை மாற்றினால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் காரமடை பேரூராட்சி தலைவர் விளக்கம்

Print PDF

தினமலர் 17.02.2010

குடிநீர் குழாயை மாற்றினால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் காரமடை பேரூராட்சி தலைவர் விளக்கம்

மேட்டுப்பாளையம் : ""குடிநீர் குழாய் பதித்து 20 ஆண்டிற்கு மேலானதால், தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் அடிக்கடி உடைகிறது. குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, அனைத்து குடிநீர் குழாயையும் மாற்ற வேண்டும்,'' என, காரமடை பேரூராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.காரமடை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில், 10 வார்டுகள் நகர் பகுதியிலும், எட்டு வார்டுகள் கிராமப்பகுதியிலும் அமைந் துள்ளன.

பவானி ஆற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர், சுத்தம் செய்து அனைத்து வார்டுகளுக்கும் சப்ளை செய்கின்றனர். குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால், சீரான முறையில் தண்ணீர் சப்ளை செய்ய முடிவதில்லை. குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும், மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபடுகின்றனர்.குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு குறித்து, பேரூராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:காரமடையில் உள்ள வார்டுகளில் சில இடங்களுக்கு ஒரு நாள் விட்டு ஒருநாளும், சில இடங்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.

பேரூராட்சியில் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், குடிநீரின் தேவையும் அதிகரித்தது. புதியதாக குடிநீர் திட்டம் அமைக்கக்கோரி குடிநீர் வடிகால் வாரியத்திடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், அவர்கள் புதியதாக உயர் அழுத்த மின் மோட்டார்களை மட்டும் வாங்கி கொடுத்தனர். அந்த மோட்டார் மூலம் தண்ணீர் பம்ப் செய்யும் போது, அடிக்கடி குடிநீர் குழாய் உடைகிறது. தற்போதுள்ள குடிநீர் திட்டம் 20 ஆண்டிற்கு முன் போடப்பட்டது. மண்ணில் புதைத்துள்ள குடிநீர் குழாய் "ஏசி குழாய்' புதிய மின் மோட்டார் மூலம் பம்ப் செய்யப்படும் தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் அடிக்கடி உடைகிறது. "ஏசி குழாய் தற்போது உற்பத்தி இல்லாததால், சிமென்ட் குழாய் பதித்து, அதன் மீது சிமென்ட் பூச்சு பூசி, காய்ந்த பிறகு தண்ணீர் விட இரண்டு நாட்கள் ஆகிறது. இதனால் ஏற்படும் குளறுபடியால் சில வார்டுகளுக்கு தண்ணீர் வர ஐந்து நாட்களுக்கும் மேலாகிறது. குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அனைத்து குடிநீர் குழாயை மாற்றி, புதிய குடிநீர் திட்டம் அமைக்க வேண்டும். அரசுக்கு கோரிக்கை விடுக்க உள்ளோம். இவ்வாறு காரமடை பேரூராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் கூறினர்.

Last Updated on Wednesday, 17 February 2010 05:19