Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்க திட்டங்கள்... தயார்:ரூ.7.74 கோடியில் செயல்படுத்த முடிவு

Print PDF

தினமலர் 01.03.2010

குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்க திட்டங்கள்... தயார்:ரூ.7.74 கோடியில் செயல்படுத்த முடிவு

தேனி:தேனி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க, ரூ.7.74 கோடியில் புதிதாக குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. தேனி மாவட்டத்தில் காலனி மற்றும் விரிவாக்க பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க குடிநீர் வடிகால் வாரியம் மூலம் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் பேரூராட்சிகளில் ரூ.6 கோடியே 48 லட்சத்து 40 ஆயிரத்தில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தேனி ஒன்றியத்திலுள்ள கோட்டூர் ஆதிதிராவிடர் காலனியில் ரூ.1.81 லட்சத்திலும், தப்புக்குண்டு ஆதிதிராவிடர் காலனியில் ரூ.3.64 லட்சத்திலும், கொடுவிலார்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் ரூ.7.85 லட்சத்திலும் தனி மின்விசைத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளன.

பெரியகுளம் ஒன்றியத்தில், டி.வாடிப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் ரூ.5.75 லட்சத்திலும், எருமலைநாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் ரூ.2.27 லட்சத்திலும், வடபுதுப்பட்டி ராதாகிருஷ்ணன் நகரில் ரூ.5.07 லட்சம், வடபுதுப்பட்டி எம்.ஜி.ஆர்.,நகரில் ரூ.6.82 லட்சம், ஜல்லிபட்டி மீனாட்சிபுரம் காலனியில் ரூ.5.60 லட்சத்திலும் தனி மின்விசைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. சின்னமனூர் ஒன்றியத்தில், முத்துலாபுரம் ஆதிதிராவிடர் காலனியில் ரூ.2.19 லட்சத்திலும், முத்துலாபுரம் எம். பெருமாள்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் ரூ.2 லட்சத்திலும், கன்னிசேர்வைபட்டி கிழக்கு காலனியில் ரூ.3.32 லட்சத்திலும், உத்தமபாளையம் ஒன்றியத்தில் கோகிலாபுரம் ஆதிதிராவிடர் காலனியில் ரூ.2.49 லட்சத்திலும், மேலசிந்தலைச்சேரி காலனியில் ரூ.3.07 லட்சத்திலும், லட்சுமி நாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் ரூ.5.99 லட்சத்திலும் மின்விசைத்திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கம்பம் ஒன்றியத்தில் குள்ளப்பகவுண்டன்பட்டி தெற்கு மற்றும் வடக்கு காலனிகளில் ரூ.8.94 லட்சம் செலவிலும், ஆங்கூர்பாளையம் திருவள்ளுவர்பட்டி காலனியில் ரூ.8.91 லட்சத்திலும், ஆண்டிபட்டி ஒன்றியத்தில் பிச்சம்பட்டி நாகேந்திரபுரத்தில் ரூ.4.52 லட்சம், மொட்டனூத்து முத்துசங்கிலிப்பட்டியில் ரூ.4.31 லட்சம், குன்னூர் தெற்கு காலனியில் ரூ.6.17 லட்சம் செலவில் மின்விசைத்திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடமலை ஒன்றியத்தில் தும்மக் குண்டு தண்டையார்குளம் ஆதிதிராவிடர் காலனியில் ரூ.79 ஆயிரத்திலும், கடமலைக்குண்டு கரட்டுபட்டி தெற்கு காலனியில் ரூ.3.16 லட்சத்திலும், மேலப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் ரூ.2.84 லட்சத்திலும், மந்திச் சுனையின் ரூ.4.75 லட்சத்திலும், பழியர் குடியிருப்பில் ரூ.3.50 லட்சத்திலும், கடமலை-பூமலைக் குண்டு ஆதிதிராவிடர் காலனியில் ரூ.7.68 லட்சத்திலும், பாலூத்து புதிய காலனியில் ரூ.7 லட்சத்திலும் தனிமின்விசை திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Last Updated on Monday, 01 March 2010 06:51