Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதியம்புத்தூரில் குடிநீர் தொட்டி திறப்பு விழா

Print PDF

தினமலர் 06.03.2010

புதியம்புத்தூரில் குடிநீர் தொட்டி திறப்பு விழா

புதியம்புத்தூர் : புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் தொட்டி திறக்கப்பட்டது.புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பெண்கள் பிரசவத்திற்காக 24மணி நேரம் செயல்பட்டு வருகிறது. தற்சமயம் ஏற்பட்டுள்ள வைரஸ் காய்ச்சலினால் அதிகமான நோயாளிகள் ஆஸ்பத்திரிக்கு வந்து செல்கின்றனர். இவர்களுக்கு குடிப்பதற்கு போதுமான குடிநீர் வசதி இல்லாமல் இருந்தது. எனவே மாவட்ட சுகாதார துறை மாவட்ட கலெக்டரிடம் குடிநீர் தொட்டி நிறுவ கேட்டிருந்தனர். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் மூலம் புதியம்புத்தூர் வாட்டர் டேங்கிலிருந்து தனியாக பைப் லைன் அமைத்து ஆஸ்பத்திரி அருகே 200 லிட்டர் சின்டெக்ஸ் வாட்டர் டேங் அமைத்து குடிநீர் நல்லி அமைத்திருந்தனர். புறநோயாளிகளின் நலனுக்காக இந்த குடிநீர் தொட்டி திறப்பு விழா ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பிரியதர்ஷினி தலைமை வகித்தார். குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் ஜானகிராமன், உதவிப்பொறியாளர் விஸ்வலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதியம்புத்தூர் பஞ்.,தலைவர் ஜெபராஜ் குடிநீர் தொட்டி நல்லியை திறந்து வைத்தார். விழாவில் ஹெல்த் இன்ஸ்பெக்டர் சுடலைமணி, ஜெனோவா, செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Saturday, 06 March 2010 10:14