Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீரை வீணாக்காத நகரமாக சென்னை சாதனை

Print PDF

தினமலர் 23.03.2010

குடிநீரை வீணாக்காத நகரமாக சென்னை சாதனை

புதுடில்லி : குடிநீரை வீணாக்குவதில் டில்லி முதலிடத்திலும், அடுத்து பெங்களூரு நகரமும் உள்ளது; வீணாக்காத நகரமாக சென்னை சாதிக்கிறது.

மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் சமீபத்தில், முக்கிய நகரங்களில் சுகாதாரம் மற்றும் குடிநீர் வினியோகம் குறித்த சர்வே நடத்தியது. சென்னை உட்பட 28 நகரங்களில் இந்த சர்வே நடந்தது; குடிநீரை வீணாக்குவதில் ஏழு மெகா நகரங்களில் முதலில், நாட்டின் தலைநகரான டில்லி இருப்பது தெரியவந்துள்ளது. அடுத்தபடியாக பெங்களூரு நகரம் உள்ளது.ஏழு மெகா நகரங்களான டில்லி, பெங்களூரு, மும்பை, கோல்கட்டா, சென்னை, ஐதராபாத் மற்றும் ஆமதாபாத் நகரங்களில் நடத்தப்பட்ட சர்வேயில் நகரங்கள் வாரியாக 13 சதவீதத்தில் இருந்து 52 சதவீதம் வரை தண்ணீரை வீணாக்குகின்றன. டில்லியில் 52.4 சதவீத குடிநீர் வீணாக செலவாகிறது.

பெங்களூரு நகரத்தில் 50.9 சதவீத தண்ணீர் வீணடிக்கப்படுகிறது. இங்குள்ள மக்களில் பாதி பேர் குழாய் தண்ணீரை நம்பியும், பாதிபேர் கிணற்று மற்றும் ஆழ்குழாய் தண்ணீரையும் நம்பியும் இருக்கின்றனர். இந்த பட்டியலில், குடிநீரை வீணாக்காமல் மும்பை நகரம் சாதிக்கிறது: 13 சதவீத தண்ணீரை தான் அது வீணாக்குகிறது; இந்நகரம் கடைசி இடம் பெறுகிறது; பட்டியலில் இதற்கு முன்பாக உள்ள சென்னை நகரம், 17 சதவீத தண்ணீரை மட்டுமே வீணாக்குகிறது.

Last Updated on Tuesday, 23 March 2010 07:39