Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க மாற்றுவழி குறித்து... ஆய்வு : ஹைவேவிஸ் அணையில் இருந்து தேனிக்கு குடிநீர்.

Print PDF

தினமலர் 30.03.2010

மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க மாற்றுவழி குறித்து... ஆய்வு : ஹைவேவிஸ் அணையில் இருந்து தேனிக்கு குடிநீர்.

கம்பம்: ஹைவேவிஸ் அணையில் இருந்து தேனி மாவட்டத்திற்கு குடிநீர் சப்ளை செய்வது குறித்த ஆய்வுகள் குடிநீர் வடிகால்வாரியத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மற்றும் தேனி மாவட்டங்கள் குடிநீர் தேவைக்கு, பெரியாறு அணையை நம்பியுள்ளன. தேனி மாவட்டங்களிலுள்ள நகரப்பகுதிகள், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வைகை ஆற்றில் கிணறுகள் அமைத்து, குழாய்கள் மூலம் பம்ப் செய்து, குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

மாற்று வழி: பெரியாறு அணையில் இருந்து குடிநீருக்கென தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்படும் சமயங்களில், மாற்று உத்திகளை கையாள்வது குறித்து, குடிநீர் வாரியத்தின் 'குடிநீர் ஆதாரம் கண்டறியும் பிரிவு' ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பெரியாறு அணையில் இருந்து மதுரை மற்றும் தேனி மாவட்டங்களுக்கு ஆண்டிற்கு எவ்வளவு குடிநீர் எடுக்கப்படுகிறது என்ற கணக்கு விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. பெரியாறு அணையில் இருந்து குடிநீருக்கு எடுக்கும் நீரை, மாற்று வழி யில் எவ்வாறு சேகரம் செய்வது, அதற்கான குடிநீர் ஆதாரங்கள் மாவட்டத்தில் எங்கெங்கு உள்ளது என பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

இதில் ஹைவேவிஸ் அணை தண்ணீரை தேனி நகரம் மற்றும் மாவட்டத்திலுள்ள பெரும்பகுதிக்கு பயன்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாற்றுத் திட்டம் தயாரிக்க முடிவு செய்துள் ளோம். ஹைவேவிஸ், மணலாறு அணைகளில் தேங்கும் நீரின் அளவு, சுருளியாறு மின்நிலைய பகுதியில் உள்ள காட்டோடைகளில் வரும் நீரின் அளவு ஆகியவை ஆய்வில் இருக்கிறது. ரிசர்வ் பாரஸ்ட் பகுதிகளாக இருப்பதால், வனத்துறையின் முன் அனுமதி கோரப்படும்.

அது தவிர சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு, மூல வைகை போன்ற இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.குடிநீர் தேவையை சமாளிக்க தேனி மாவட்டத்தில் போதிய அளவு குடிநீர் ஆதாரங்கள் உள்ளது. இவற்றை முறையாக பயன்படுத்தினால், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களின் குடிநீர் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை என்றார.

Last Updated on Tuesday, 30 March 2010 10:06