Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாளை., சக்திநகர், சேந்திமங்கலம்பகுதிக்கு சீரான குடிநீர் வசதி தேவை: மேயரிடம் பொதுமக்கள் கோரிக்கை

Print PDF

தினமலர் 31.03.2010

பாளை., சக்திநகர், சேந்திமங்கலம்பகுதிக்கு சீரான குடிநீர் வசதி தேவை: மேயரிடம் பொதுமக்கள் கோரிக்கை

திருநெல்வேலி:பாளை., சக்திநகர், சேந்திமங்கலம் மக்கள் குடிநீர் வசதி செய்து தரக்கோரி மேயரிடம் மனுக் கொடுத்தனர்.நெல்லை மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. இதில் பாளை., மண்டலம் 14வது வார்டு சக்திநகர் பெண்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:பாளை., சக்திநகரில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் சீராக வரவில்லை. இதனால் குடிநீருக்காக மக்கள் சிரமப்படுகின்றனர். நிலத்தடி நீரும் பயன்படுத்தக் கூடிய வகையில் இல்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சி மூலம் சீரான குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.சேந்திமங்கலம் மக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் நல்ல தண்ணீர் வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். எனவே மக்களின் நலன் கருதி ஆற்றுத் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்'.

இதுதவிர ரோடு வசதி, லைட் வசதி, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் மேயரிடம் மனுக் கொடுத்தனர். மக்கள் கொடுத்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.மக்கள் குறைதீர்க்கும் நாளில் கமிஷனர் பாஸ்கரன், துணை மேயர் முத்துராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 31 March 2010 06:16