Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்சி மாநகரின் ஒரு பகுதியில் விநியோகம் ரத்து

Print PDF

தினமணி 05.05.2010

திருச்சி மாநகரின் ஒரு பகுதியில் விநியோகம் ரத்து

திருச்சி, ஏப். 4: திருச்சி குடமுருட்டி அருகே பிரதான குடிநீர்க் குழாயில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட உடைப்பால், மாநகரின் ஒரு பகுதியில் திங்கள்கிழமை ஒரு நாள் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி தெரிவித்ததாவது: "குடமுருட்டி அருகேயுள்ள பிரதான குடிநீர்க் குழாயில் எதிர்பாராத விதமாக உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், உறையூர், மரக்கடை, விறகுப்பேட்டை ஆகிய மூன்று இடங்களிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றுவது தடைபட்டுள்ளது.

குழாய் உடைப்பைச் சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனவே, திங்கள்கிழமை மரக்கடை, பெரிய கடைவீதி, வளையல்காரத்தெரு, பூலோகநாதர் கோயில் தெரு, மதுரை சாலை, பாலக்கரை, கீழரண் சாலை, பெரிய செüராஷ்டிர தெரு, விறகுப்பேட்டை, வரகனேரி, எடத்தெரு, தாராநல்லூர், காமராஜ் நகர், உறையூர், நவாப்தோட்டம், பாண்டமங்கலம், கோணக்கரை, திருத்தாந்தோனி சாலை, பாளையம்பஜார், வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, நாச்சியார்பாளையம் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. செவ்வாய்க்கிழமை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்' என்றார் பால்சாமி.