Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தொட்டி அமைத்து குடிநீர் விநியோகம்

Print PDF

தினமணி 13.04.2010

தொட்டி அமைத்து குடிநீர் விநியோகம்

திருத்தணி, ஏப். 12: தினமணி செய்தி எரிரொலியால் திருத்தணி நகர பஸ் நிலையத்தில் தண்ணீர் தொட்டி அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

÷திருத்தணியில் முருகன் கோயில், ஒருங்கிணைந்த நீதிமன்றம், காவல் நிலையம், வருவாய் கோட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு பொது மருத்தவமனை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

÷பஸ் நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரம் பள்ளி மாணவர்கள் உட்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்லுகின்றனர். திருத்தணி சுற்றுப்புறப் பகுதிகளுக்கு 50-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

÷தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும், கோடைக்காலமாக இருப்பதால் பயணிகள் குடிநீருக்கு பெரும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் திருத்தணி பஸ் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக குடிநீர் வசதி இல்லாமல் இருந்தது.

÷இது குறித்தான செய்தி படத்துடன் அண்மையில் தினமணி நாளிதழில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தில் 2 ஆயிரம் லிட்டர் கொண்ட புதிய குடிநீர் தொட்டி அமைத்து நகராட்சி அலுவலகத்தில் இருந்து நிரந்தரமாக குடிநீர் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (படம்).

÷தற்போது பஸ் நிலையத்தில் பஸ்ஸýக்காக காத்திருக்கும் பயணிகள் தங்களது குடிநீர் தாகத்தை தீர்த்து கொள்கின்றனர்.