Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தண்ணீர் தண்ணீர்' விழிப்புணர்வு ஓட்டம்

Print PDF

தினமலர் 19.04.2010

தண்ணீர் தண்ணீர்' விழிப்புணர்வு ஓட்டம்

சென்னை : ஈஷாவின் பசுமைக்கரங்கள் திட்டம் சார்பில், 'தண்ணீர் தண்ணீர்' விழிப் புணர்வு ஓட்டம் சென்னையில் நேற்று நடந்தது.உலகளவில் பல பெண் களும், தங்களது குழந்தைகளும் குடும்பத்திற்கு தேவையான குறைந்தபட்ச தண்ணீர் எடுத்து வருவதற்காக தினமும் 6 கி.மீ., நடக்கின்றனர்.உலகளவில், ஏற்கனவே எட்டு பேரில் ஒருவருக்கு பாதுகாப்பான தூய்மையான குடிநீர் கிடைப்பதில்லை. உலகளவில் நிலவும் தண்ணீர் பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் கவனத்தை கவர்வதற்காக, ஈஷாவின் பசுமைக்கரங்கள் திட்டம் சார்பில், சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையிலிருந்து 6 கி.மீ., துரத்திற்கு ஓடும், 'தண்ணீர் தண்ணீர்' விழிப்புணர்வு ஓட்டம் நடந்தது.

இந்நிகழ்ச்சியை, சென்னை குடிநீர் வாரிய தலைவர் சிவ் தாஸ் மீனா துவக்கி வைத்தார். சென்னை மேயர் மா.சுப்ரமணியன், குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்வரண்சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மழைநீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு முகாமில் நீர் சேமிப்பு, மறுசுழற்சி மற்றும் மறுஉபயோகம் பற்றி பொதுமக் களுக்கு விளக்கப்பட்டது.

Last Updated on Monday, 19 April 2010 06:09