Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் வடிகால் வாரியப் பணிக்கு பெயர்கள் பரிந்துரை

Print PDF

தினமணி 20.04.2010

குடிநீர் வடிகால் வாரியப் பணிக்கு பெயர்கள் பரிந்துரை

உதகை ஏப். 19: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து தகுதியான நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழ.தனபாலன் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு குடிநீர் வடிகால் மற்றும் நீரகற்று வாரிய செயலரால் இளநிலை உதவியாளர் பணிக் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளவையாகும். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்காக தகுதியானவர்களாவர். இவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

இப்பணியிடங்களில் ஆதிதிராவிடரில் முன்னுரிமையுள்ள பொதுப்பிரிவினரில் கலப்புத் திருமணம் புரிந்தோர், மொழிப்போர் தியாகிகளின் சட்டப்பூர்வமான வாரிசுகள், தமிழ் மொழிக் காவலர்களின் வாரிசுதாரர் மற்றும் முன்னாள் ராணுவத்தினரை சேர்ந்த

அனைத்து மனுதாரர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, பழங்குடியினரில் முன்னுரிமையுள்ள பொதுப்பிரிவில் கலப்புத் திருமணம் புரிந்தோர், மொழிப்போர் தியாகிகளின் சட்டப்பபூர்வமான வாரிசு, தமிழ்மொழிக் காவலர்களின் வாரிசுதாரர் மற்றும் முன்னாள் ராணுவத்தினரை சேர்ந்த அனைத்து மனுதாரர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் முன்னுரிமையற்ற ஆதிதிராவிட பெண்களில் 19.8.93 வரையிலும், பொதுப்பிரிவில் 16.11.99 வரையிலும், பழங்குடியினரில் முன்னுரிமையற்ற பெண்களில் 12.9.2000 வரையிலும், பொதுப்பிரிவினரில் 9.4.2003 வரையிலும், ஆதிதிராவிட உடல் ஊனமுற்றோரில் 26.9.2003 வரையிலும், ஆதிதிராவிட உடல் ஊனமுற்ற காது

கேளாதோர் மற்றும் கண் பார்வையற்றோரில் அனைத்து மனுதாரர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்த உத்தேச பதிவு மூப்பு விபரங்கள் மாவட்ட இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இப்பதிவு மூப்பிற்குள் இடம் பெற்றுள்ள மனுதாரர்கள் தங்களது பெயர் பட்டியலில் இடம் பெறுவதை இம்மாதம் 23ம் தேதிக்குள் உதகையிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Last Updated on Tuesday, 20 April 2010 10:17