Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோடையில் முன் ஏற்பாடு இல்லாததால் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு

Print PDF

தினமலர் 22.04.2010

கோடையில் முன் ஏற்பாடு இல்லாததால் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு

விருதுநகர் : கோடை காலத்தில் குடி நீர் சப்ளை குறித்து முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தட்டுப்பாடுள்ள பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூடத்தில் மின் வாரிய அலுவலர்கள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள்,நகராட்சி ஆணையர்கள்,பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது.

குடி நீர் தட்டுப்பாடு: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப்பகுதியில் மழை இல்லாமல் அணைகள் முழுவதும் வறண்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் கோடை காலத்தை மனதில் கொண்டு முன் ஏற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. கோடை துவங்கிய பின்னர் சிறுமின் விசை தொட்டி, சிறு கூட்டு குடி நீர் திட்டங்களுக்கு திட்டமதிப்பீடு தயாரிக்க கோரியுள்ளது. இந்த பணிகள் துவங்குவதற்குள் கோடை காலம் முடியும் நிலை ஏற்பட்டு விடும்.

லாரிகள் மூலம் சப்ளை: குடிநீர் தட்டுப்பாடுள்ள பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க அந்தந்தப்பகுதி அலுவலர்கள் தங்களுக்குத் தேவையான குடிநீர் விபரத்தினை மாவட்ட நிர்வாகத்திடம் உடனடியாக வழங்க கேட்டுள்ளது. கூட்டுக்குடிநீர் திட்டப்பணிமின் இணைப்புகளில் தனிப் பீடர் லைன் அமைத்து தடையில்லா மின்சாரம் வழங்கவும் மின் வாரிய அலுவலர்களுக்கு கலெக்டர் சிஜிதாமஸ் உத்தரவிட்டார்.குடிநீர்வாரிய அதிகாரிகள் சந்திரன்,ரிச்சர்ட் ஸ்டான்லி,உதவி இயக்குனர் (ஊராட்சி)கோமதிசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 22 April 2010 07:11