Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

முறையற்ற குடிநீர் இணைப்பு இருந்தால் கவலை இல்லை இரண்டு மடங்கு வைப்பு தொகை செலுத்தினால் போதும் : மாநகராட்சிமக்களுக்கு வாய்ப்பு

Print PDF

தினமலர் 24.04.2010

முறையற்ற குடிநீர் இணைப்பு இருந்தால் கவலை இல்லை இரண்டு மடங்கு வைப்பு தொகை செலுத்தினால் போதும் : மாநகராட்சிமக்களுக்கு வாய்ப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அனுமதியற்ற வீட்டு குடிநீர் இணைப்பு செய்திருப்பவர்கள் இரண்டு மடங்கு வைப்பு தொகை செலுத்தி அதனை முறைப்படுத்தி கொள்ளலாம் என்று மாநகராட்சி கமிஷனர் (பொ) ராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அதிக எண்ணிக்கையில் முறையற்ற முறையில் வீட்டு குடிநீர் இணைப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. பல ஆயிரக்கணக்கானோர் இதுபோன்ற இணைப்பினை வைத்திருப்பதால் உள்ளா ட்சி அமைப்புகளுக்கு இழ ப்பீடு ஏற்படுகிறது. அத்துடன் சோதனையின் போது முறையற்ற குடிநீர் இணை ப்பு கண்டுபிடிக்கப்படும் போது அவை துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.இதுபோன்ற நடவடிக்கையால் சிலர் வி..பிக்கள் மூலம் சிபாரிசு செய்வதும், சிலர் நகர உள்ளாட்சி அமைப்பினை எதிர்த்து கோர்ட்டிற்கு செல்லும் நிலையும் ஏற்படுகிறது. இதனால் நகர்புற உள்ளாட்சி அமைப்புக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இதனால் அரசு முறையற்ற குடிநீர் இணைப்புகளை ஒழுங்குபடுத்தும் வகையில் மக்கள் பயன் பெறும் வகையில் புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு செயலாளர் நிரஞ்சன்மார்டி புதிய அரசாணை எண் 65ஐ கடந்த 12ம் தேதி வெளியிட்டார்.

தற்போது இந்த ஆணை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு வந்துள்ளது. இதனை தொட ர்ந்து இந்த புதிய உத்தரவை செயல்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சியில் கமிஷனர் குபேந்திரன் உத்தரவின் பேரில் மாநகராட்சி பொறியாளர் ராஜகோபாலன் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இது குறித்து கமிஷனர் (பொ) ராஜகோபாலன் கூறியதாவது;தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தற்போது அனுமதியற்ற வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளவர்கள் மாநகராட்சியை அணுகினால் உடனடியாக அந்த இணைப்பு முறைப்படுத்தி கொடுக்கப்படும். மாநகராட்சியில் தற்போது வசூலிக்கப்படும் வைப்புத் தொ கையை போன்று இரண்டு மடங்கு வைப்பு தொகை இதற்காக முதலில் கட்டி விட வேண்டும்.அரசின் இந்த புதிய நடைமுறை மூன்று மாத காலம் மட்டும் செயல்படுத்தப்படும். அதற்குள் முறையற்ற வீட்டு குடிநீர் இணைப்பை பொதுமக்கள் முறைப்படுத்தி கொள்ளலாம். அரசின் இந்த அறிய வாய்ப்பை தூத்துக்குடி மாநகராட்சி மக்கள் உடனடியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இது சம்பந்தமாக அலுவலக நாட்களில் மாநகராட்சி பொ றியியல் பிரிவினை அணுகலாம். இவ்வாறு ராஜகோபாலன் தெரிவித்தார

Last Updated on Saturday, 24 April 2010 06:12