Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆம்பூர் நகராட்சியில் குடிநீர் திட்டப் பணிகளுக்கு ரூ.48 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமணி 28.04.2010

ஆம்பூர் நகராட்சியில் குடிநீர் திட்டப் பணிகளுக்கு ரூ.48 லட்சம் ஒதுக்கீடு

ஆம்பூர், ஏப்.27:ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை நடந்த நகர்மன்ற சாதாரண கூட்டத்தில் குடிநீர் திட்டப் பணிகளுக்கு ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது.

கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் வாவூர் நஜீர் அஹமத் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் தா. உதயராணி, பொறியாளர் இளங்குமரன், துணைத் தலைவர் தமிழரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க் கட்சிகள் விடுத்திருந்த அழைப்பையொட்டி அதிமுக நகர்மன்ற உறுப்பினர் என்.எஸ். ரமேஷ் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்கவும், குடிநீரை சீராக விநியோகம் செய்வதற்காக ஜெனரேட்டர், மின்மோட்டார், பிளாஸ்டிக் டேங்குகள் வாங்குவதற்கும், பைப் லைன் அமைக்கவும், ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும் ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் தொடங்க அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ரூ.15 லட்சம் செலவில் சாலை பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பள்ளிகொண்டாவில் இயங்கி வரும் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை ஆம்பூருக்கு கொண்டு வரவும், அழகாபுரி நகராட்சி தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவும் சம்பந்தப்பட்ட துறைகளை கோருவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.