Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வடவள்ளிக்கு வந்து சேர்ந்தது கூட்டு குடிநீர் திட்ட தண்ணீர்

Print PDF

தினமலர் 05.05.2010

வடவள்ளிக்கு வந்து சேர்ந்தது கூட்டு குடிநீர் திட்ட தண்ணீர்

பேரூர்: குடிநீர் சோதனை ஓட்டத்தில் பவானி ஆற்றிலிருந்து வடவள்ளிக்கு குடிநீர் வந்து சேர்ந்தது. வடவள்ளி பேரூராட்சிக்கு, சிறுவாணி குடிநீர்த் திட்டத்தில் குடிநீர் வழங்கப்படுகிறது. வடவள்ளி பேரூராட்சியில் 31 லிட்டர் குடிநீர் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்தால், அதிகரிக்கும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, இப் பேரூராட்சியில் நபரொருவருக்கு 70 லிட்டராகவும் உயர்த்தும் எண்ணத்தில் இக் கூட்டு குடிநீர்த் திட்டம் உருவாக் கப்பட்டது. ரூ. 29 கோடி செலவில் பவானி ஆறு நெல்லித்துறை பகுதியிலிருந்து குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, வடவள்ளி பேரூராட்சிகளில் மேல்நிலைத் தெ õட்டிகளுக்கு நீர் ஏற்றப்படுகிறது. பகிர்மானக் குழாய்கள் வழியாக பொது மக்களுக்கு விநியோகம் செய்ய முடிவானது. இத்திட்டம் தமிழ்நாடு குடிநீர் வாரியத்தால் செயல்படுத்த முடிவாகி,இரு ஆண் டுக்கு முன் பணிகள் துவங்கியது. பணிகள் விறு, விறுப்பாக நடத்தி முடிக்கப்பட்டு, பவானியிலிருந்து சோதனை தண்ணீர் ஓட்டம் வடவள்ளிக்கு வந்து சேர்ந்துள்ளது. கூட்டு குடிநீர் திட்டம் மூலம், பவானி ஆற்றிலிருந்து வடவள்ளிக்கு சோதனை நீர் வந்ததை, பேரூராட்சி தலைவர் அமிர்தவல்லி, துணை தலைவர் சிவசாமி, முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளர் துரைசாமி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் பார்வையிட்டனர்.