Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குழாய் தொட்டியில் ஜெனரேட்டர் தேவை

Print PDF

தினமலர் 05.05.2010

குழாய் தொட்டியில் ஜெனரேட்டர் தேவை

பெரியகுளம்: பெரியகுளம் குழாய் தொட்டி பகுதியில் ஜெனரேட்டர் அமைப்பதற்கு நகராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும். பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசிக்கின்றனர். கொடைக்கானல் வனப் பகுதி பேரிஜம் ஏரியிலிருந்து மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.அங்கிருந்து வரும் நீர் சோத்துப்பாறை அணைவழியாக குழாய்தொட்டியில் சேகரமாகிறது. இங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் மின்மோட்டார் மூலம் தென்கரை, வடகரை பகுதிகளிலில் உள்ள தலா பத்து லட்சம் லிட்டர் கொள் ளளவு உடைய தொட்டிகளில் நீர் சேகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.பெரியகுளம் பகுதி மக்களுக்கு தினமும் 45 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்க வேண்டும். பெரியகுளம் பகுதியில் அடிக் கடி மின்தடை ஏற்படுவதால் குடிநீர் விநியோகம் பாதிப்படைகிறது. நகராட்சி நிர்வாகம் குடிநீர் கட்டணத்தை உயர்த்தி, மின்தடை பிரச்னையை சமாளிக்க ஜெனரேட்டர் வாங்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் இத்திட்டம் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. கோடைகாலத்தில் விரைவில் ஜெனரேட்டர் வாங்கி சீராக குடிநீர் விநியோகிக்க வேண் டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர

Last Updated on Wednesday, 05 May 2010 06:15