Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

தம்மம்பட்டியில் டிராக்டர்களில் குடிநீர் விநியோகிக்க முடிவு

Print PDF

தினமணி               04.07.2013

தம்மம்பட்டியில் டிராக்டர்களில் குடிநீர் விநியோகிக்க முடிவு

தம்மம்பட்டியில் பொதுமக்களுக்கு டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளது.

தம்மம்பட்டியில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதால், பொதுமக்களுக்கு டிராக்டர் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பேரூராட்சி மன்றத் தலைவர் பொ.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

வயல் பகுதிகளைச் சார்ந்த வார்டுகளைத் தவிர, நகர்ப் பகுதியிலுள்ள அனைத்து வார்டுகளுக்கும் சுழற்சி அடிப்படையில் டிராக்டர்களில் குடிநீர் வழங்கப்பட உள்ளது.

 

பில்லூர்-1 குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகள்: இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Print PDF

தினமணி               04.07.2013

பில்லூர்-1 குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகள்: இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்

பில்லூர்-1 குடிநீர் திட்டத்தின் கீழ் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் வெள்ளமடை, கீரணத்தம் பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 4) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இப்பணிகள் முடிவுற்றதும் ஜூலை 5-ஆம் தேதி நீருந்துதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளாட்சி நிறுவனங்களும், பொதுமக்களும், தங்கள் உள்ளூர் நீராதாரங்கள் மூலமாக மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பராமரிப்புக் கோட்ட (பில்லூர்) அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு குடிநீர் இணைப்புகள் விரைவில் வழங்க ஏற்பாடு: மாநகராட்சி அதிகாரிகள் அறிவிப்பு

Print PDF

தினத்தந்தி                  03.07.2013

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு குடிநீர் இணைப்புகள் விரைவில் வழங்க ஏற்பாடு: மாநகராட்சி அதிகாரிகள் அறிவிப்பு


கோவை மாநகராட்சி பகுதியில் குடிநீர் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் குடிநீர் இணைப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடிநீர் இணைப்பு

கோவை மாநகராட்சி பகுதியில் சிறுவாணி, பில்லூர், ஆழியாறு மற்றும் பவானி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக கோவைக்கு குடிநீர் வழங்கக் கூடிய அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால் தற்போது கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது.

இதற்கிடையே மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடியிருந்து வருபவர்களில் குடிநீர் இணைப்பு பெறாதவர்கள் தங்களுக்கு புதிய இணைப்பு கேட்டு கோவை மாநகராட்சியில் விண்ணப்பம் கொடுத்தனர். இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில், புதிதாக குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் ஜூலை மாதம் 1–ந் தேதி முதல் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று மேயர் தெரிவித்து இருந்தார்.

அதைத்தொடர்ந்து புதிய குடிநீர் இணைப்புகள் எப்போது வழங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:–

விரைவில் வழங்க ஏற்பாடு

கோவை மாநகராட்சி பகுதியில் மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. புதிதாக குடிநீர் இணைப்பு கேட்டு 3 ஆயிரத்து 500–க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம் செய்து உள்ளனர்.

அவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அரசு உத்தரவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரவு வந்ததும், முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பித்த அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

இணைப்பு துண்டிப்பு

தற்போது மாநகராட்சி பகுதியில் உள்ளவர்களுக்கு 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒருசிலர் வீட்டில் மின்மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சி எடுப்பதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டு இருக்கிறது. மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சும்போது, மேடான பகுதிகளுக்கு தண்ணீர் செல்ல சிரமம் ஏற்படுகிறது.

எனவே குடிநீர் இணைப்பில் மின்மோட்டாரை வைத்து தண்ணீர் உறிஞ்சுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Thursday, 04 July 2013 07:10
 


Page 36 of 390