Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

மெரீனா கடற்கரையில் குடிநீர்த் தொட்டிகள் அமைக்க மாநகராட்சி திட்டம்

Print PDF

தினமணி 30.07.2009

மெரீனா கடற்கரையில் குடிநீர்த் தொட்டிகள் அமைக்க மாநகராட்சி திட்டம்

சென்னை, ஜுலை 29: தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் மெரீனா கடற்கரையில் குடிநீர்த் தொட்டிகள் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மெரீனா கடற்கரையில் ஆகஸ்டு 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது. மெரீனா கடற்கரையில் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் மற்றும் பாட்டில்களில்தான் குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது. எனவே பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுவதால் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் மற்றும் பாட்டில்களில் தண்ணீர் விற்க முடியாது. இதனால் மெரீனா கடற்கரையில் குடிநீர்ப் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மெரினா கடற்கரையில் குடிநீர் பிரச்னையை தவிர்க்க சென்னை மாநகராட்சி தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்காக வியாழக்கிழமை மேயர் மா. சுப்பிரமணியன் தலைமையில் உயர் அதிகாரிகள் கூட்டம் நடக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ரோட்டரி சங்கம், லயன்ஸ் கிளப், ரவுண்ட் டேபிள் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.

10 குடிநீர் தொட்டிகள் அமைக்கத் திட்டம்: தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் 500 மீட்டருக்கு ஒரு தொட்டி என 10 குடிநீர்த் தொட்டிகள் அமைக்க மாநகராட்சி திட்டமிருப்பதாகத் கூறப்படுகிறது. ரூ. 4 லட்சம் செலவில் அமைக்கப்படவுள்ள இந்த குடிநீர்த் தொட்டியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

குடிநீர் குழாய்கள் சீரமைப்பு பணி தீவிரம்

Print PDF

தினமலர் 29.07.2009

 

கருமத்தம்பட்டியில் குடிதண்ணீர் திருட்டை தடுக்க பேரூராட்சி அதிரடி நடவடிக்கை

Print PDF

மாலை மலர் 28.07.2009

கருமத்தம்பட்டியில் குடிதண்ணீர் திருட்டை தடுக்க பேரூராட்சி அதிரடி நடவடிக்கை

இருகூர், ஜூலை. 28-

கருமத்தம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கு சரியாக குடிநீர் வருவதில்லை. சிலர் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுகிறார்கள் என்று புகார்கள் வந்து குவிந்தன. குடிநீர் திருட்டை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் பலமுறை எச்சரித்தும் பலன் இல்லை. இதைத் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.

அனைத்து வார்டுகளிலும் உள்ள குடிநீர் இணைப்பு களில் ""ப்ளோ-அப் கண்ட்ரோல் வால்வு"" பொருத்தப்பட்டது. பிரதான குடிநீர் குழாயில் இருந்து வீட்டு இணைப்புக்கு செல்லும் வழியில் இந்த வால்வு பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் குடிநீர் அதிக அழுத்தத்தில் செல்லாது. சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்கும். மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் வால்விலுள்ள குண்டு குழாயை அடைத்து இணைப்பு தானாக துண்டிக்கப்படும்.

பேரூராட்சி நிர்வாகம் இதனை சரி செய்தால் மட்டுமே மீண்டும் குடிநீர் கிடைக்கும். இந்த வால்வுகள் இணைப்புத்தாரரின் செலவிலேயே பேரூராட்சி நிர்வாகம் பொருத்தி வருகிறது.

வால்வு பொருத்தப்படாத இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்படும் என்று கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் மகாலிங்கம், செயல் அலுவலர் தண்டபாணி ஆகியோர் எச்சரித்துள்ளனர்.

 


Page 372 of 390