Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

சென்னைக்கு குடிநீர் தரும் ஸ்ரீசைலம் அணை வேகமாக நிரம்புகிறது

Print PDF

மாலை மலர் 28.07.2009

சென்னைக்கு குடிநீர் தரும் ஸ்ரீசைலம் அணை வேகமாக நிரம்புகிறது

ஜூலை. 28-

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதில் கிருஷ்ணா தண்ணீருக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த தண்ணீர் ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் இருந்து கண்ட லேறு அணைக்கு கொண்டு செல்லப்படும். பின்னர் அங்கிருந்து ஜீரோபாயிண்ட் வழியாக புழல் ஏரியை வந்தடையும்.

கடந்த மாதம் ஸ்ரீசைலம் அணை தண்ணீர் இல்லாமல் வறண்டு போனது. இதனால் ஆந்திராவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில் கர்நாடகம், மராட்டியத்தில் கிருஷ்ணா, துங்கபத்ரா நதிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 வார காலமாக நல்ல மழை பெய்து வருகிறது. எனவே ஸ்ரீசலைம் அணைக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்தது. இதனால் ஸ்ரீசலைம் அணை வேகமாக நிரம்புகிறது.

தற்போது அணை நீர்மட்டம் 840 அடியை தாண்டி விட்டது. தற்போது அணையில் தற்போது 96.7672 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் ஸ்ரீசைலம் அணை ஓரிரு வாரத்தில் நிரம்பி விடும் என்று ஆந்திர நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் கூறினார்கள்.

 

திருமூர்த்தி அணை புதிய குடிநீர் திட்ட பணிகள் தீவிரம்

Print PDF

தினமலர் 28.09.2009

 

திண்டுக்கல்லுக்கு வைகை அணை மூலம் குடிநீர்

Print PDF

தினமணி 28.07.2009

திண்டுக்கல்லுக்கு வைகை அணை மூலம் குடிநீர்

திண்டுக்கல், ஜூலை 27: திண்டுக்கல் நகரின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வைகை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கான திட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக கே. பாலபாரதி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

திண்டுக்கல் ராணி மங்கம்மாள் காலனி-எம்.வி.எம். கல்லூரி சாலை சந்திப்பில் ரூ. 4 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின் விளக்கை அவர் இயக்கி வைத்துப் பேசுகையில், காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தின் மூலம் நகருக்கு நீர் பெறப்பட்டாலும் 15 தினங்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகம் உள்ளது. இப் பிரச்னைக்கு தீர்வாக வைகை அணையில் இருந்து நேரடியாக திண்டுக்கல் நகருக்கு குடிநீர் வழங்க திட்ட வரைவுகள் தயாரிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

விழாவுக்கு தலைமை வகித்து திண்டுக்கல் நகர்மன்றத் தலைவர் ஆர். நடராஜன் பேசுகையில், நகர் முழுவதும் குடிநீர் விநியோகத்திற்காக ரூ. 1.25 கோடி செலவில் பகிர்மானக் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. பூச்சி நாயக்கன்பட்டி மற்றும் ஆர்.எம். காலனி அருகே 50 லட்சம் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இப்பணிகள் முடிவடைந்ததும் 3 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க முடியும் என்றார்.

நகர்மன்ற துணைத் தலைவர் வ. கல்யாணசுந்தரம் வரவேற்றார். நகராட்சிப் பொறியாளர் ராமசாமி, உதவிப் பொறியாளர் வெற்றிச்செல்வி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

 


Page 373 of 390