Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

கீழ்ப்பாக்கம் பகுதியில் குழாய் இணைக்கும் பணி: அண்ணாநகர் பகுதியில் இன்றும், நாளையும் குடிநீர் தடை ஏற்படும் சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

Print PDF

தினத்தந்தி               21.06.2013

கீழ்ப்பாக்கம் பகுதியில் குழாய் இணைக்கும் பணி: அண்ணாநகர் பகுதியில் இன்றும், நாளையும் குடிநீர் தடை ஏற்படும் சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் பி.சந்திரமோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

குடிநீர் வாரிய பகுதி 8, அண்ணாநகரை சேர்ந்த செனாய்நகர், டி.பி.சத்திரம், அமைந்தகரை மற்றும் அண்ணாநகர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகத்தை மேம்படுத்துவதற்காக டி.பி.சத்திரம் சாலை மற்றும் சிமெட்ரி சாலையில் புதிதாக போடப்பட்ட குழாய்களை கீழ்ப்பாக்கம் தோட்ட சாலையில் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி முதல் 22–ந்தேதி (நாளை) காலை 6 மணி வரை டி.பி.சத்திரம், செனாய் நகர், வில்லிவாக்கம், அண்ணாநகர், அமைந்தகரை மற்றும் கீழ்ப்பாக்கம் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் தடை ஏற்படலாம். பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் குடிநீர் பெறுவதில் சிரமம் ஏற்பட்டால் லாரிகள் மூலம் குடிநீர் பெற, 8–பகுதியாளர், 8144930908 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு டாக்டர் பி.சந்திரமோகன் கூறியுள்ளார்.
 

கீழ்ப்பாக்கம், அண்ணாநகரில் இன்று குடிநீர் விநியோகம் ரத்து

Print PDF

தினமணி               21.06.2013

கீழ்ப்பாக்கம், அண்ணாநகரில் இன்று குடிநீர் விநியோகம் ரத்து

கீழ்ப்பாக்கம் தோட்ட சாலையில் குழாய் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்ப்பாக்கம், அமைந்தகரை, அண்ணாநகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) மாலை 6 மணி முதல் சனிக்கிழமை (ஜூன் 22) காலை 6 மணி வரை குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட உள்ளது.

இது குறித்து குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அறிவிப்பு:

டி.பி.சத்திரம் சாலை மற்றும் சிமெட்ரி சாலையில் புதிதாக பதிக்கப்பட்ட குழாய்களை கீழ்ப்பாக்கம் தோட்ட சாலையில் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதன் காரணமாக வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து சனிக்கிழமை காலை வரை டி.பி.சத்திரம், செனாய் நகர், வில்லிவாக்கம், அண்ணாநகர், அமைந்தகரை மற்றும் கீழ்ப்பாக்கம் பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடலாம். லாரிகள் மூலம் குடிநீர் பெற 8144930908 என்ற அலைபேசி எண்ணில் பகுதி பொறியாளரைத் தொடர்பு கொள்ளலாம்.

 

நொளம்பூர், காரப்பாக்கத்தில் 2 ஆண்டுகளில் 7,500 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு

Print PDF

தினமணி               21.06.2013

நொளம்பூர், காரப்பாக்கத்தில் 2 ஆண்டுகளில் 7,500 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு

சென்னை பெருநகர திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் நொளம்பூர், காரப்பாக்கம் பகுதிகளில் 2 ஆண்டுகளுக்குள் 7500 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.

இது குறித்து குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் பி.சந்திரமோகன் வெளியிட்ட செய்தி:

சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளான நொளம்பூர், ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், ராமாபுரம், நந்தம்பாக்கம், ஒக்கியம்-துரைப்பாக்கம், மணப்பாக்கம் ஆகிய இடங்களில் குடிநீர் திட்டம் மற்றும் கத்திவாக்கம், சோழிங்நல்லூர், காரப்பாக்கம், ராமாபுரம் ஆகிய இடங்களில் கழிவுநீர் திட்டங்களுக்காக ரூ. 452.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நொளம்பூர் மற்றும் காரப்பாக்கத்தில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. 24,506 பேர் வசிக்கும் நொளம்பூர் பகுதியில் குடிநீர் திட்டப் பணிகளுக்காக 40 ஆயிரத்து 279 மீட்டர் நீளத்துக்கு குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. 18 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்டப்பட உள்ளது. இப்பகுதியில் 2959 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது.

24,724 பேர் வசிக்கும் காரப்பாக்கத்தில் 47 ஆயிரத்து 401 மீட்டர் நீளத்திற்கு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. 25 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி மற்றும் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலைத் தொட்டிகள் கட்டப்பட உள்ளன. இப்பகுதியில் 4568 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.31.97 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் இப்பணிகள் மூலம் 49 ஆயிரத்து 230 பேர் பயனடைவர். இன்னும் இரண்டு ஆண்டுகளில் திட்டப்பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 41 of 390