Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சிறப்பு ஏற்பாடு

Print PDF

தினமணி             20.06.2013 

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சிறப்பு  ஏற்பாடு

கடலூர் நகராட்சியில் 11 இடங்களில் ரு.8.75 லட்சம் செலவில் சிறு மின் விசை பம்புகள் அமைக்கப்படுகின்றன.

  •  கடலூர் நகரில் சில வார்டுகளில் குடிநீர்ப் பிரச்னை உள்ளது. இதனால் காசு கொடுத்து குடிநீர் வாங்கி குடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
  •  இதை கருத்தில் கொண்டு கடலூர் நகராட்சிப் பகுதியில் 11 இடங்களில் ரூ.8.75 லட்சம் மதிப்பீட்டில் சிறுமின் விசைப் பம்புகள் அமைக்கப்படுகின்றன.
  •  இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியது: கடலூர் நகரில் தற்போது நிலவி வரும் வறட்சியை சமாளிக்கும் வகையில் கடலூர் துறைமுக நகர், பாவுக்காரத் தெரு, சராங்கு தெரு, கொடிக்கால் குப்பம், மாந்தோப்பு, நத்தவெளி, மணவெளி, முத்துக்குமரன் காலனி, காமராஜ் நகர் பின்புறம், இந்திராநகர் மற்றும் சேட்டு காலனி ஆகிய 11 இடங்களில் சிறு மின் விசை பம்புகள் அமைக்கப்படுகின்றன.
  •  11 இடங்களிலும் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து அதில் சிறு மின் விசை பம்புடன் குடிநீர்த் தொட்டிகள் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும். இதற்காக டெண்டர் விடப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும் என்றார்.
Last Updated on Thursday, 20 June 2013 07:13
 

சிறுவாணியில் நீர்மட்டம் உயர்வு: கோவைக்கு தினசரி 45 எம்.எல்.டி குடிநீர் வினியோகம் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது நேற்று முதல் நிறுத்தப்பட்டது

Print PDF

தினத்தந்தி               19.06.2013

சிறுவாணியில் நீர்மட்டம் உயர்வு: கோவைக்கு தினசரி 45 எம்.எல்.டி குடிநீர் வினியோகம் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது நேற்று முதல் நிறுத்தப்பட்டது


சிறுவாணியில் இருப்பு நிலை நீர்மட்டம் உயர்வதால் கோவைக்கு தினசரி 45 எம்.எல்.டி குடிநீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சி எடுப்பது நேற்று முதல் நிறுத்தப்படுகிறது.

சிறுவாணி அணை

கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் பொய்த்து போனதால் அணை வறண்டு போகும் நிலைமைக்கு தள்ளப்பட்டது.

இதனால் கேரள மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குட்டை போல் தேங்கி கிடந்த பகுதியில் இருந்து 6 மோட்டார்கள் வைத்து, தண்ணீர் உறிஞ்சி எடுப்பதற்கு அனுமதி பெறப்பட்டு கோவைக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

80 சென்டி மீட்டர் மழை

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் 80 மில்லி மீட்டர்(8 சென்டி மீட்டர்) மழை பெய்தது. இதனால் சிறுவாணி அணையின் இருப்பு நிலை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

தினசரி 45 எம்.எல்.டி தண்ணீர்

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இருப்பு நிலை நீர்மட்டம் தாண்டி, அணையில் உள்ள வால்வு பகுதியில் தண்ணீர் மட்டம் வந்துவிடும் நிலை உள்ளது. இதனால் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சி எடுப்பது நிறுத்தப்படுகிறது. இருந்தாலும் தண்ணீர் மட்டம் உயர்ந்து விட்டதால் அந்த மோட்டார்களை தற்போது எடுப்பதற்கு முடியாத சூழ்நிலை உள்ளது.

சிறுவாணி முற்றிலும் வறண்டு இருப்பு நிலை நீர்மட்டத்துக்கு சென்ற போது மோட்டார் மூலம் 30 எம்.எல்.டி முதல் 35 எம்.எல்.டி வரை எடுக்கப்பட்டு வந்தது. தற்போது தினசரி 45 எம்.எல்.டி (4½ கோடி லிட்டர்) தண்ணீர் எடுக்கப்படுகிறது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் இன்னும் உயர்ந்தாலும், நிரம்பி வழிந்தாலும் தற்போது எடுக்கப்படும் 45 எம்.எல்.டி அளவுக்கு மேல் எடுக்க முடியாது என்று அவர் கூறினார்.

 

எளம்பிள்ளை பகுதியில் புதிய குழாய் பதிக்கும் பணி தொடக்கம்

Print PDF

தினமணி               19.06.2013

எளம்பிள்ளை பகுதியில் புதிய குழாய் பதிக்கும் பணி தொடக்கம்

சேலம் மாவட்டம், எளம்பிள்ளை அருகே குடிநீர்க் குழாயில் சாயக் கழிவுநீர் வந்ததாகக் கூறப்பட்டதையடுத்து, புதிதாக மாற்று குடிநீர்க் குழாய் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

எளம்பிள்ளை அருகே உள்ள வேம்படிதாளம், நடுவனேரி, பெருமாகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு எளம்பிள்ளையில் உள்ள மேல்நிலை குடிநீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் சாயக் கழிவுநீர் கலந்து வந்தது.

அதைக் குடித்த நடுவனேரி, வேம்படிதாளம் பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்றனர்.

இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதிகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில், குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், எளம்பிள்ளையிலிருந்து பெருமாகவுண்டம்பட்டி, வேம்படிதாளம், நடுவனேரி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பழைய குடிநீர் குழாய்களுக்குப் பதிலாக புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 


Page 42 of 390