Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ஜூலை முதல் புதிய குடிநீர் இணைப்பு: மேயர் அறிவிப்பு

Print PDF

தினமணி               19.06.2013

ஜூலை முதல் புதிய குடிநீர் இணைப்பு: மேயர் அறிவிப்பு

கோவை மாநகராட்சிப் பகுதியில் ஜூலை மாதம்முதல் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று மேயர் செ.ம. வேலுசாமி அறிவித்தார்.

கோவை மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.

சிங்கை பாலன் (அதிமுக): கடந்த காலங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு இருந்தது. அதனால் புதிய குடிநீர் இணைப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இப்போது குடிநீர் பிரச்னை தீர்ந்துள்ள நிலையில், புதிய குடிநீர் இணைப்புக்கான தடையை நீக்க வேண்டும்.

மேயர்: குடிநீர் பிரச்னை தீர்ந்தது மகிழ்ச்சி தருகிறது. கோவை மாநகராட்சிப் பகுதியில் சுமார் 3000 பேர் குடிநீர் இணைப்பு கோரி காத்திருக்கின்றனர். குடிநீர்ப் பிரச்னை தீர்ந்துள்ள நிலையில், வரும் ஜூலைமுதல் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

கோவை மாநகராட்சிப் பகுதியில் 60 பிளம்பர்கள் உள்ளனர். மொத்தமுள்ள 100 வார்டுகளுக்கு மேலும் 40 பிளம்பர்களை நியமித்துவிட்டு, அதன்பின் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இது தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும்.

ராஜ்குமார் (வடக்கு மண்டலத் தலைவர்): கோவை வ.உ.சி. பூங்காவில் தள்ளுவண்டிகளை நிறுத்தி நாற்காலிகளைப் போட்டு அமர்ந்து கொள்கின்றனர். வ.உ.சி. பூங்காவில் நாய்த் தொல்லை அதிகமாக உள்ளது. இக்கடைகளில் தரமற்ற உணவுகள் விநியோகிக்கப்படுகின்றன. மேலும் குழந்தைத் தொழிலாளர்களும் அதிக அளவில் வேலை செய்கின்றனர்.

நஞ்சப்பா சாலையில் வாகனங்கள் நிறுத்தக் கூடாது என்று அறிவித்துள்ளனர்.

மேயர்: வ.உ.சி. பூங்காவில் அனுமதியற்ற கடைகள் அகற்றப்படும். நாய்களுக்கு கர்ப்பத் தடை செய்வதற்கு மாநகராட்சி ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட உள்ளது. உடனடியாக இப் பிரச்னை தீர்க்கப்படும்.

வடக்கு மண்டலத் தலைவர்: கணபதி பகுதியில் தெருவிளக்குகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஒருசில மணி நேரம் மட்டும் தெருவிளக்குகள் எரிகின்றன. போக்குவரத்தைச் சரிசெய்ய வேண்டிய நிலையில் உள்ள போலீர், கிராஸ்கட் சாலையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். காவல்துறையினரின் இந்த முடிவு பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேயர்: தெருவிளக்குகள் குறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் விசாரிக்கலாம்.

 

உளுந்தூர்பேட்டையில் குடிநீர் விநியோகம் சீரானது

Print PDF

தினமணி               19.06.2013

உளுந்தூர்பேட்டையில் குடிநீர் விநியோகம் சீரானது

உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு மட்டிகை கிராமத்திலிருந்து குடிநீர் வரும் குழாயில் ஏற்பட்டிருந்த உடைப்பு, செவ்வாய்க்கிழமை சீரமைக்கப்பட்டது.

  இப்பேரூராட்சிக்கு குடிநீர் வழங்க, உளுந்தூர்பேட்டை வட்டத்திற்குட்பட்ட மட்டிகை, ஆண்டிக்குழி, நரியின் ஒடை, கூ.கள்ளக்குறிச்சி, ஆரிநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் ஆழ்துளை குழாய் மூலம் நீர் எடுக்கப்படுகிறது. இந்த நீர் சுமார் 15 கிமீ தூரம் பூமிக்கடியில் புதைக்கப்பட்ட குழாய் மூலம், உளுந்தூர்பேட்டை பேரூராட்சி வளாகத்தில் உள்ள சுமார் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டியில் ஏற்றப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

  அண்மைக்காலமாக அடித்த கடும் வெயில் காரணமாக, பூமிக்கடியில் இருந்த குழாய்களில் ஆங்காங்கே 20-க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வெளியேறி வீணாகியது. இதனால் விநியோகம் பாதித்து, உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

  இதையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தினர் உடைப்பு ஏற்பட்ட இடங்களை கண்டறிந்து அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக, உளுந்தூர்பேட்டையை அடுத்த நகர் ரயில்வே கேட் அருகில் பெரிய குழாயில் ஏற்பட்டஉடைப்பை சரிசெய்யும் பணி பேரூராட்சித் தலைவர் க.ஜெயசங்கர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பொக்லைன் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டி உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மாற்று குழாயை புதைத்து சீரமைத்தனர். இதையடுத்து உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் குடிநீர் விநியோகம் சீரானது.

 

காவிரியில் வெள்ள காலத்தில் குழாய்கள் சேதம் தடுக்க ^4.95 கோடியில் திட்டம் முசிறியில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை

Print PDF

தினகரன்                  17.06.2013

காவிரியில் வெள்ள காலத்தில் குழாய்கள் சேதம் தடுக்க ரூ.4.95 கோடியில் திட்டம் முசிறியில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை

முசிறி, : முசிறியில் காவிரி ஆற்றில் வெள்ள காலத்தில் குடிநீர் குழாய்கள் அடித்து செல்லப்படு வதை தடுக்க ரூ.4.95 கோடி யில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி காவிரி ஆற்றில் போர்வெல் கிணறு அமைக்கப்பட்டு, அதன் மூலம் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மழை காலத்தில் வெள்ளம் ஏற்பட்டால் போர்வெல் லில் இருந்து ஆற்றின் கரை க்கு குடிநீர் எடுத்து வரும் குழாய்கள் அடித்துச் செல்லப்படுவதும், அந்த சமயத்தில் முசிறி நகர மக்கள் குடிநீருக்காக சிரமப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தினர். இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவிடம் எம் எல்ஏ சிவபதி கோரிக்கை விடுத்தார்.

அதற்கான திட்ட மதிப்பீடு ரூ.4.95 கோடியில் தயார் செய்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

வெள்ள காலங்களில் குழாய்கள் அடித்து செல் லாத வகையில் சிறிய அள வில் தூண்கள் அமைத்து அதன் மேல் குழாய்கள் கொண்டு செல்லப்பட உள் ளது. மேலும் தண்ணீரை உறிஞ்சுவதற்கு அதிக திறன் கொண்ட மோட்டார் பொருத்தப்பட உள்ளது.

இந்நிலையில் தற்போது நிலத்தடி நீர் மட்டம் மேலும் குறைந்து விட்ட தால், முசிறி பகுதியில் குடி நீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே எம்.எல்.ஏ. சிவபதி நேற்றுமுன்தினம் காவிரி ஆற்றுக்கு சென்று, அங்கு கூடுதலாக போர்வெல் கிணறு அமைப்பது பற்றி பேரூராட்சி அலுவலர்களு டன் ஆலோசனை நடத்தினார். மேலும் ரூ.4.95 கோடியில் திட்டப்பணிகள் மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தையும்  சிவபதி பார்வையிட்டார்.

முசிறி பேரூராட்சி தலைவர் மாணிக்கம், அதி முக ஒன்றிய செயலாளர் கள் முசிறி ராஜமாணிக் கம், தா.பேட்டை ஜெயம், அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் மார்க்கெட்ராஜ், நகர எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் குட்டி ஜெயசீலன், தா. பேட்டை முன்னாள் நகர செயலாளர் முனுசாமி, பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

 


Page 43 of 390