Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

சிறுவாணியில் பலத்த மழை பெய்வதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது மோட்டார் வைத்து உறிஞ்சும் நிலைமை ஒரு சில நாட்களில் நீங்கிவிடும்

Print PDF

தினத்தந்தி             17.06.2013

சிறுவாணியில் பலத்த மழை பெய்வதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது மோட்டார் வைத்து உறிஞ்சும் நிலைமை ஒரு சில நாட்களில் நீங்கிவிடும்


சிறுவாணியில் ஒரே நாளில் 10 சென்டி மீட்டர் மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் மேலும் அரைமீட்டர் உயர்ந்தது. இதனால் ஒரு சில நாட்களில் மோட்டார் வைத்து உறிஞ்சும் நிலைமை நீங்கிவிடும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 சிறுவாணி நீர்மட்டம்

கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக சிறுவாணி உள்ளது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் பொய்த்து போனதால் அணை வறண்டு போகும் நிலைமைக்கு தள்ளப்பட்டது. இதனால் கோவை மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

 இதைத்தொடர்ந்து கேரள மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குட்டை போல் தேங்கி கிடந்த பகுதியில் இருந்து மோட்டார் வைத்து உறிஞ்ச அனுமதி பெறப்பட்டு கோவைக்கு தினமும் 4 கோடி லிட்டர் அளவுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

 10 சென்டி மீட்டர் மழை

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளது. கோவையில் பலத்த மழை பெய்யாவிட்டாலும், மழை தூறலாக உள்ளது. சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நேற்று முன்தினம் 101 மில்லி மீட்டர் (10 சென்டி மீட்டர்) மழை பெய்தது. இதனால் சிறுவாணியின் நீர்மட்டம் ஒரே நாளில் அரைமீட்டர் அளவுக்கு உயர்ந்தது.

சிறுவாணி அணையின் மொத்த கொள்ளவு 50 அடியாகும். குறைந்தபட்ச நிலையை தொட வேண்டுமானால், கோவைக்கு குடிநீர் வழங்க கூடிய அணையின் வால்வு பகுதியில் நீர்மட்டம் உயர வேண்டும். 4 வால்வுகளும் தண்ணீருக்கு வெளியே உள்ளது. வால்வு பகுதியில் இன்னும் ஒரு மீட்டர் அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்தால், தானாகவே வால்வு பகுதி வழியாக சாடிவயல் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு வரும்.

 மோட்டார் தேவையில்லை

 அணையின் நீர்மட்டம் வால்வு பகுதியில் விரைவில் அதிகரிக்கும் என்பதால், ஒரு சில நாட்களில் மோட்டார் வைத்து உறிஞ்சப்படும் நிலைமை நீங்குவதுடன், கோவைக்கு கூடுதலாக சிறுவாணி நீர் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படலாம் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

திருச்செந்தூரில் குடிநீர் விநியோகம் பாதிப்பு

Print PDF

தினமணி               14.06.2013

திருச்செந்தூரில் குடிநீர் விநியோகம் பாதிப்பு

திருச்செந்தூரில் குடிநீர்க் குழாய் உடைந்ததால் 2 நாள்கள் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

பொன்னன்குறிச்சி கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாயில், திருசெந்தூர் அரசு மருத்துவமனை பின்புறப் பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதேபோல கானம் குடிநீர்த் திட்டக் குழாய்களிலும் உடைப்பு ஏற்பட்டது.

இதனால் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் திருச்செந்தூரில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. வியாழக்கிழமை மாலையில் குடிநீர்க் குழாய் சீரமைக்கப்பட்டது.

 

தொடர் மழை எதிரொலி சிறுவாணியில் நீர் உறிஞ்ச கேரள அரசு அனுமதி

Print PDF
தமிழ் முரசு               12.06.2013

தொடர் மழை எதிரொலி சிறுவாணியில் நீர் உறிஞ்ச கேரள அரசு அனுமதி

கோவை:கோவையின் குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை, கேரளாவில் உள்ளது. கடும் வறட்சியால் 1.5 மீட்டர் (மொத்த உயரம் 15 மீட்டர்) மட்டுமே தண்ணீர் உள்ளது. ஆங்காங்கே குட்டை போல் தேங்கியுள்ள நீரை, மோட்டார் மூலம் உறிஞ்சி வினியோகிக்கும் பணி நடக்கிறது. அணையில் நீர் எடுப்பது தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நேற்று வரை குடிநீர் பெற ஒப்புதல் வழங்கப்பட்டது. கேரள அரசின் நீர் எடுப்பு கெடு காலம் நேற்றுடன் முடிந்தது. இன்று முதல் குடிநீர் பெற முடியுமா, அணை மூடப்படுமா என்ற பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பருவ மழை நீடிப்பதால் அணை நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. ஒரே வாரத்தில் அணை நீர் மட்டம் 60 செ.மீ வரை உயர்ந்து விட்டது. மழை மூலம் கிடைக்கும் தண்ணீரை தொடர்ந்து எடுக்கிறோம். இதற்கு ஒப்புதல் தரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். மழை தினமும் பெய்வதாலும், அணைக்கு தினமும் 6 முதல் 7 கோடி லிட்டர் தண்ணீர் வருவதாலும் கேரள நீர்ப்பாசனத் துறையினர் தொடர்ந்து குடிநீர் எடுக்க நேற்று ஒப்புதல் வழங்கினர். இன்று வழக்கம் போல் சிறுவாணி அணையில் இருந்து குடிநீர் பெறப்படும்.

கோவை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நேற்று அணையின் நீர் பிடிப்பு பகுதியில் 30 மி.மீ மழை பெய்தது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 150 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. மழை நீடிப்பதால் அணை நீர்மட்டம் குறைய வாய்ப்பில்லை. இன்னும் 50 செ.மீ நீர் மட்டம் உயர்ந்தால் மோட்டார் இல்லாமல் நேரடியாக வால்வு மூலம் குடிநீர் பெற முடியும். இன்னும் 3.5 மீட்டர் அளவு நீர் மட்டம் உயர்ந்தால், குறைந்தபட்ச இருப்பு நிலையை அணை அடைந்துவிடும். அதன்பின், கேரள அரசின் ஒப்புதல் இல்லாமல் குடிநீர் பெற முடியும்‘ என்றார்.
 


Page 44 of 390