Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

புதிய குடிநீர் குழாய் பதிப்பு பணிகள் தொடக்கம்

Print PDF
தினமணி          05.06.2013

புதிய குடிநீர் குழாய் பதிப்பு பணிகள் தொடக்கம்


விழுப்புரம் நகரில் குடிநீர் குழாய்கள் பழுதானதையொட் டி, புதிய குழாய்கள் பதிக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

பிடாகம் தென்பெண்ணையாற்று பகுதியில் இருந்து நகரக் குடிநீர் அபிவிருத்தித் திட்டம் மூலம் 1966-ம் ஆண்டு விழுப்புரம் நகருக்கான குடிநீர் பணிகள் தொடங்கப்பட்டன.

இப்பணிகள் 1969-ம் ஆண்டு முடிவடைந்து, விழுப்புரம் நகருக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், விழுப்புரம் நகராட்சி பயணியர் விடுதி அருகே உள்ள குடிநீர் குழாய் செல்லும் வால்வு கடந்த 4 நாள்களுக்கு முன்பு பழுதடைந்தது.

இந்த வால்வு மிகவும் பழமையானது என்பதால் இதே போன்ற வால்வுகள் கொல்கத்தாவிலிருந்து வரவழைக்கப்பட்டன.

பின்னர் புதிய குழாய்கள் பதிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது. மேலும் இக்குழாய்களுடன் இணைக்கப்பட்ட கை பம்புகளில் தற்போது தண்ணீர் வருவதால் அப்பகுதியில் குடிநீர் தேவை சீரானது.

குழாய் பழுது காரணமாக, கடந்த 4 நாள்களாக விழுப்புரம் மேற்கு பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
 

மின்தடை எதிரொலி மாநகரில் இன்று குடிநீர் சப்ளை ரத்து

Print PDF
தினகரன்       04.06.2013

மின்தடை எதிரொலி மாநகரில் இன்று குடிநீர் சப்ளை ரத்து


திருச்சி, : மின்தடையால் இன்று குடிநீர் விநியோகம் இருக் காது என மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி மாநகராட்சிக்கு உட் பட்ட கம்பரசம்பேட்டை, பெரி யார் நகர் நீரேற்று நிலையங்கள், கம்பரசம்பேட்டை துணை மின் நிலையம் ஆகியவற்றில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி இன்று நடக்கிறது. எனவே மரக்கடை, விறகுபேட்டை, உறையூர், மலைக்கோட்டை, சிந்தாமணி ஆகிய பகுதிகளிலும், பெரியார் நகர் நீர் சேகரிப்பு கிணறு பகுதியில் இருந்து குடிநீர் விநியோகிக்கப் படும் தில்லைநகர், அண்ணாநகர், புத்தூர், காஜாபேட்டை, கன்டோன்மென்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்கநகர், கருமண்டபம் மற் றும் காஜாமலை காலனி.

ராம்ஜிநகர், பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதூர், கே.கேநகர், எல்ஐசி காலனி, விசுவநாதபுரம், கே.சாத்தனூர், தென்றல் நகர், விசு வாஸ் நகர், ஆனந்த் நகர், சுப்ரமணிய நகர் ஆகியவற்றில் காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை மின் தடை அமலில் இருக்கும். எனவே மேற்கண்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.

வழக்கம்போல் நாளை (5ம் தேதி) முதல் குடிநீர் விநியோகம் சீராக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

அரியமங்கலம் பகுதியில் இன்று குடிநீர் வராது

Print PDF
தினமணி       31.05.2013

அரியமங்கலம் பகுதியில் இன்று குடிநீர் வராது

திருச்சி பொன்மலை கூட்டுக் குடிநீர்த் திட்ட பிரதான நீரேற்றும் உந்து குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக அரியமங்கலம் பகுதிகளில் மட்டும் வெள்ளிக்கிழமை ஒரு நாள் குடிநீர் வராது.

 சென்னை புறவழிச்சாலையில் திருவானைக்கா அருகே ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், அரியமங்கலம், மேலக்கல்கண்டார்கோட்டை, பொன்னேரிபுரம், செந்தண்ணீர்புரம், பொன்மலைப்பட்டி, சுப்பிரமணியபுரம், செம்பட்டு, கல்லுக்குழி, காஜாநகர், காஜாமலை ஆகிய பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.

 சனிக்கிழமை வழக்கம்போல குடிநீர் விநியோகம் செய்யப்படும் என ஆணையர் வே.ப. தண்டபாணி அறிவித்தார்.
 


Page 48 of 390