Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ஆத்தூர் நகராட்சியில் 15 லட்சம் செலவில் புதிய ஆழ்துளை கிணறு

Print PDF
தினகரன்        22.05.2013

ஆத்தூர் நகராட்சியில் 15 லட்சம் செலவில் புதிய ஆழ்துளை கிணறு

ஆத்தூர்,: ஆத்தூர் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கி 15 லட்சம் செலவில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் உள்ள 33 வார்டு பகுதி பொதுமக்களுக்கும் நகராட்சியின் மூலம் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வீட்டு இணைப்புகளின் மூலம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது மேட்டூரிலிருந்து வரும் காவிரி நீரின் அளவு மிகவும் குறைவாக உள்ளதால் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குடிநீர் தட்டுபாட்டை போக்க நகராட்சி மூலம் ஒவ்வொரு வார்டு பகுதிக்கும் லாரிகளின் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் பொதுமக்களுக்கு போதிய அளவு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு வருவதையடுத்து நிரந்தரமாக தண்ணீர் வரத்தை அதிகரிக்கும் பொருட்டு 2&வது வார்டு பகுதியில் உள்ள அய்யனார் கோயில் ஏரியின் உள் பகுதியில் புதியதாக போர்வெல் அமைத்து அதிலிருந்து தண்ணீர் எடுத்து ஆத்தூர் பொதுமக்களுக்கு வழங்க நகராட்சி மன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அய்யனார் கோயில் ஏரியில் கி 15 லட்சம் செலவில் 3 புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியினை நகரமன்ற தலைவர் உமாராணி பிச்சக்கண்ணன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், வீராசாமி, குணசேகரன் செல்லக்கண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

சுரண்டை பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு போக்க ரூ.50 லட்சத்தில் புதிய கிணறு

Print PDF
தினகரன்       21.05.2013

சுரண்டை பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு போக்க ரூ.50 லட்சத்தில் புதிய கிணறு

சுரண்டை, : சுரண்டை பேரூராட்சி பகுதியில் குடிநீர் பிரச்னை தீர புதிய கிணறு வெட்டும் பணி நடக்கிறது.

சுரண்டை பேரூராட்சி பகுதியான சுரண்டை, கீழச்சுரண்டை, மேலச்சுரண்டை, ஆனைகுளம், குருங்காவனம், சிவகுருநாதபுரம், வரகுணராமபுரம் உட்பட 18 வார்டுகள் உள் ளன. இப்பகுதி பொதுமக்களுக்கு கடையநல்லூர் தாமிரபரணி குடிநீர் திட்டம், வாசுதேவநல்லூர் குடிநீர் திட்டம், சுரண்டை அனுமன்நதி குடிநீர் திட் டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக கோடை மழை மற்றும் பருவமழை சரிவர பெய்யவில்லை. அத னால் விவசாய பணிகள் முடங்கி கிடக்கிறது. மேலும் பொதுமக்களுக்கு தேவை யான அளவுக்கு குடிநீர் வழங்க முடியவில்லை.  

இந்நிலையில் சுரண்டை பேரூராட்சி தலைவர் ஜெயராணி வள்ளிமுருகன் கலெக்டர் சமயமூர்த்தியிடம் மனு அளித்தார். அதனை பரிசீலித்த கலெக் டர் குடிநீர் பணிக்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். அதன் அடிப்படையில் சுரண்டை பெரியகுளத்தில் புதிய திறந்தவெளி கிணறு வெட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வேலை விரைவில் முடிந்தவுடன் உடனே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் அதன் மூலம் சுரண்டை பகுதியில் குடிநீர் பிரச்னை தீரும் என பேரூராட்சி தலைவர் ஜெயராணி வள்ளிமுருகள் தெரிவித்தார். துணைத்தலைவர் பழனி, செயல் அலுவலர் பொன்னம்பலம் ஆகியோர் உடன் இருந்தனர்.
 

குடிநீரை பற்றாக்குறையை சமாளிக்க சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை

Print PDF
தினமணி                  18.05.2013

குடிநீரை பற்றாக்குறையை சமாளிக்க சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை


பொது மக்களுக்கு தேவையான குடிநீரை சென்னை குடிநீர் வாரியம் வினியோகம் செய்து வருகிறது தற்போது கேன் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது நடைமுறையில் உள்ள டயல்பார் வாட்டர் என்ற திட்டத்திபடி லாரிகள் மூலம் 6000 லிட்டர் ரூ.400, 9000 லிட்டர் ரூ.600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குடிநீர் வேண்டும் என்று போன் செய்தால் அந்த இடத்திற்கு லாரி மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. வியாபார பயன்பாட்டுக்கு வேண்டும் என்றால் முறையே ரூ.510, ரூ.765 விலையில் வழங்கப்படுகிறது. பொது மக்களே லாரிகளை கொண்டு வந்து தண்ணீர் தேவை என்றால் ஆயிரம் லிட்டர் ரூ.40-க்கும், வணிக பயன்பாட்டிற்கு ரூ.60-க்கு விற்கப்படுகிறது. மேலும் தலைமை அலுவலகத்தில் 45674567 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கூறலாம். குடிநீர் வாரியம் வழங்கும் தண்ணீர் பாதுகாப்பானது என துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 


Page 53 of 390