Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

நெகமத்தில் ரூ.8.83 கோடியில் புதிய பம்ப்பிங் ஸ்டேஷன்

Print PDF

தினமலர்               29.04.2013 

நெகமத்தில் ரூ.8.83 கோடியில் புதிய பம்ப்பிங் ஸ்டேஷன்

நெகமம் : நெகமம் பேரூராட்சி பகுதியில் அம்பராம்பாளையம் குடிநீர் திட்டத்தில், எட்டு கோடியே 83 லட்சம் ரூபாய் செலவில் பம்ப்பிங் ஸ்டேஷன் அமைக்கப்படவுள்ளது.

நெகமம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் ஒன்பதாயிரத்து 600 பேர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதிக்கு அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில், தினமும் ஆறு லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் குடிநீர் வடிகால் வாரியம் வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தம்.

ஆனால், தினமும் இரண்டு லட்சம் தண்ணீர் மட்டுமே வழங்கி வருவதால், பேரூராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதுகுறித்து பேரூராட்சித் தலைவர் சோமசுந்தரம், மாவட்ட கலெக்டருக்கும், பேரூராட்சிகளின் உதவி இயக்குனருக்கும் கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில், அம்பராம்பாளையம் குடிநீர் திட்டத்தில் இருந்து, புதிய இணைப்பு நெகமம் பேரூராட்சிக்கு வழங்க குடிநீர் வடிகால் வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டது.

இதற்கு, ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் எட்டு கோடியே 83 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நெகமம் பேரூராட்சிக்கு புதிய பைப் லைன் பதித்து தண்ணீர் வினியோகம் செய்வதற்கு, பம்ப்பிங் ஸ்டேஷன் பொள்ளாச்சியை அடுத்துள்ள தாளக்கரையில் குடிநீர் வடிகால் வாரியம் அமைக்க திட்டமிட்டது.

இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதை வேளாண்மைத் துறை அமைச்சர் தாமோதரன் துவக்கி வைத்தார். இதில், பொள்ளாச்சி எம்.எல்.ஏ., முத்துக்கருப்பண்ணசாமி, பொள் ளாச்சி எம்.பி., சுகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

மாநகராட்சி கமிஷனர் தகவல் மாநகராட்சி பகுதியில் தங்கு தடையின்றி குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி              29.04.2013

மாநகராட்சி கமிஷனர் தகவல் மாநகராட்சி பகுதியில் தங்கு தடையின்றி குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை

மாநகராட்சி பகுதியில் குடி தண்ணீர் தங்கு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கமிஷனர் நந்தகோபால் கூறினார்.

குடிதண்ணீர்

மதுரையை அடுத்த மணலூரில் மாநகராட்சியின் நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. அங்குள்ள நீர் உறிஞ்சு கிணறுகள் பழுதடைந்து இருந்தன. அதனை சீரமைத்து தண்ணீர் சேகரிக்கப்படுகிறது.

அங்கிருந்து 4 வார்டுகளுக்கு குடிநீர் வினியோகத்தை மேயர் ராஜன் செல்லப்பா நேற்று தொடங்கி வைத்தார்.

அதைதொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால் கூறியதாவது:–

மணலூர் நீர் உறிஞ்சு கிணறுகள் சீரமைக்கப்பட்டு தினமும் 4 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது.

அந்த தண்ணீர் 59 முதல் 62–வது வார்டுகள் வரை 4 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. அதன்படி 40 முறை லாரிகள் மூலம் அந்த 4 வார்டுகளில் தினமும் தண்ணீர் வினியோகிக்கப்படும்.

நடவடிக்கை

ஏற்கனவே திருப்பரங்குன்றம், மூலக்கரையில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து மண்டலம்–2 விரிவாக்கப்பகுதிகளுக்கு மங்களக்குடி குடிநீர் திட்டத்தின் மூலம் லாரிகளில் குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படுகிறது. மாநகராட்சியின் பழைய 72 வார்டுகளுக்கு வைகைகூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சீராக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

மீதம் உள்ள 28 வார்டுகளுக்கும் குடிநீர் சீராக வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் தங்கு தடைஇன்றி வழங்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

குடிநீர் தொட்டி திறப்பு

Print PDF
தினமணி       27.04.2013

குடிநீர் தொட்டி திறப்பு


வத்தலகுண்டு 13ஆவது வார்டில் பொதுநிதியிலிருந்து ரூ.1.60 லட்சம் செலவில் அமைக்கபட்ட  குடிநீர்த் தொட்டி திறக்கப்பட்டது. பேரூராட்சித் தலைவர் சுசித்ரா பாண்டியன் விழாவுக்குத் தலைமை தாங்கி குடிநீர்த் தொட்டியைத் திறந்து வைத்தார். அதிமுக நகரச் செயலாளர் எம்.வி.எம். பாண்டியன் பேரூராட்சி துணைத் தலைவர் பீர்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி கவுன்சிலர்கள் நாகூர்கனி, ஹபிப்ராஜா, இளங்கோவன், செல்லத்துரை, முத்துச்சாமி செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 


Page 59 of 390