Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ஊட்டியில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க நகராட்சி s.13.50 லட்சம் ஒதுக்கியது

Print PDF
தினகரன்        27.04.2013

ஊட்டியில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க நகராட்சி s.13.50 லட்சம் ஒதுக்கியது


ஊட்டி:ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.13.30 லட்சத்தை நகராட்சி ஒதுக்கியுள்ளது.

ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பார்சன்ஸ்வேலி, மார்லிமந்து, டைகர் ஹில், கோரிசோலா, தொட்டபெட்டா அப்பர் மற்றும் லோயர் அணைகள், கோடப்மந்து அப்பர் மற்றும் லோயர் அணைகள், ஓல்டு ஊட்டி, கிளன்ராக் போன்ற அணைகளில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஊட்டி நகர் பகுதி மற்றும் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு குடிநீர் வினியோகம் செய்ய முக்கிய ஆதாரமாக பார்ச்ன்ஸ்வேலி அணை உள்ளது. இந்த அ¬ ண மின்வாரியத்திற்கு சொந்தமானது. இந்த அணையில் உள்ள நீரைக் கொண்டு குந்தா மின்வாரியம் மின் உற்பத்தி செய்து வருகிறது.

மேலும் இந்த அணையில் இருந்து மின் உற்பத்திக்கு தேவையான தண்ணீர் நாள் தோறும் எடுக்கப்படுகிறது. இது தவிர ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நகர £ட்சி நிர்வாகம் பார்சன் ஸ்வேலி அணையில் இரு ராட்சத மோட்டார் களை பொறுத்தி அணையில் இருந்து தண்ணீர் எடுத்து, அதனை பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வருகிறது.

இந்நிலையில் மின் உற்பத்திக்காக நாள் தோறும் இந்த அணையில் இருந்து மின் வாரியம் தண்ணீர் எடுத்து வரும் நிலையில் தற்போது அணையில் உள்ள நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே செல்கிறது. இதே போல் மற்ற அணைகளிலும் தண்ணீர் குறைந்துக் கொண்டே செல்கிறது. தற்போது நகரின் பல பகுதிகளில் 5 நாளுக்கு ஒரு முறையே தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்யாமல் உள்ளதால் அடுத்த மாதம் ஊட்டியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் கடும் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது. தொடர்ந்து புற நகர் பகுதிகளில் மழை பெய்த போதி லும் அணைகள் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாமல் உள்ளது. இதன £ல் அணைகள் முற்றிலும் வறண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். குறிப்பாக அடுத்த மாதம் சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு போதுமான தண்ணீர் வினியோகம் செ ய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதனால் கோடையில் ஏற்படும் தண்ணீர் பிரச் னையை களைய தற்போது ஊட்டி நகராட்சி நிர்வாகம் ரூ.13 லட்சத்து 50 ஆயிரத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் தண்ணீர் பிரச்னையை போக்க முடிவு செய்துள்ளது. மேலும் 15 ராட்சத குடிநீர் தொட்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் லாரி தண்ணீரை நிரப்பி தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு வினியோகிக்க நகராட்சி திட்டமிட்டுள்ளது.இத்திட்டம் மூலம் ஊட்டி நகரில் ஏற்பட்டு வரும் தண்ணீர் பிரச்னையை ஓரளவு களைய முடியும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

மாநகரில் இன்று குடிநீர் ரத்து

Print PDF
தினகரன்        26.04.2013

மாநகரில் இன்று குடிநீர் ரத்து

திருச்சி: திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பொன்மலை குடிநீர் திட்டப்பணியில் அடங்கும் சஞ்சீவ் நகர் பகுதியில் புதிய ஊன்று குழாய் இணைக்கும் பணி நடக்கிறது. எனவே அரியமங்கலம், மலைப்பாநகர், ரயில்நகர், ஜெகநாதபுரம், முன்னாள் ராணுவத்தினர் காலனி, மேலக்கல்கண் டார் கோட்டை, விவேகானந்தர் நகர், பொன்னேரிபுரம், பொன்மலைப்பட்டி, மத்திய சிறை சாலை பகுதி, சுந்தர்ராஜ் நகர், சங்கிலியாண்டபுரம், காமராஜ் நகர், காஜாமலை, கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூர், அன்புநகர், கல்லுக்குழி, செங்குளம் காலனி போன்ற பகுதிகளில் இன்று (26ம் தேதி) ஒருநாள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. நாளை (27ம் தேதி)  வழக்கம் போல் குடிநீர் விநியோகிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

கவுண்டம்பாளையம்- வடவள்ளி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு தடையில்லா மின்சாரம்

Print PDF
தினமணி        25.04.2013

கவுண்டம்பாளையம்- வடவள்ளி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு தடையில்லா மின்சாரம்


கவுண்டம்பாளையம்- வடவள்ளி கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு தடையில்லா மின்சார வசதியை கோவை மேயர் செ.ம. வேலுசாமி புதன்கிழமை துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட கவுண்டம்பாளையம்- வடவள்ளி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் தினமும் 11 எம்.எல்.டி. குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

கவுண்டம்பாளையம் நீருந்து நிலையத்துக்குத் தடையில்லா மின்சாரம் பெறுவதற்காக ரூ.48.67 லட்சம் மாநகராட்சி சார்பில் மின்வாரியத்துக்குச் செலுத்தப்பட்டது.

இப்பணி நிறைவடைந்து மேயர் செ.ம. வேலுசாமி புதன்கிழமை துவக்கி வைத்தார்.

கவுண்டம்பாளையத்தில் 5, 6, 7, 8 மற்றும் 9 வார்டுப் பகுதிகளும், வடவள்ளிப் பகுதியில் 16 மற்றும் 19-ஆவது வார்டுப் பகுதி மக்களும் பயன் பெறுவர். இத்திட்டத்தால் 26 ஆயிரத்து 587 இணைப்புகளுக்கு குடிநீர் கிடைக்கும். மொத்தம் 1.42 லட்சம் பேர் பயன்பெறுவர்.

கவுண்டம்பாளையம்- வடவள்ளி வார்டுப் பகுதிகளுக்கு கடந்த 2011 மக்கள் தொகை அடிப்படையில் 14 ஆயிரத்து 206 மக்கள் பயன் பெறும் வகையில் தனி நபருக்கு 70 லிட்டரில் இருந்து 135 லிட்டராக உயர்த்தும் வகையில் குடிநீர் குழாய் பதிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதற்காக ரூ.13 கோடி செலவிடப்பட உள்ளது. ஒப்பந்தப் புள்ளி உறுதி செய்யப்பட்டதும் பணிகள் விரைவில் துவங்கும் என்று மேயர் செ.ம. வேலுசாமி தெரிவித்தார்.

துணை ஆணையர் சு.சிவராசு, மாநகரப் பொறியாளர் சுகுமார், தமிழ்நாடு மின்வாரிய முதன்மைப் பொறியாளர் தங்கவேல், மேற்பார்வைப் பொறியாளர் குருராஜன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் இக்பால், செயற்பொறியாளர் காளியண்ணன், மாநகராட்சி மேற்கு மண்டலத் தலைவர் சாவித்திரி பார்த்திபன், நியமனக் குழுத் தலைவர் ராஜேந்திரன், நிதிக் குழுத் தலைவர் பிரபாகரன், மாமன்ற உறுப்பினர்கள் மயில்சாமி, மாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 


Page 60 of 390