Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை

Print PDF
தினமணி        09.04.2013

மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை


குடிநீர்த் திட்டங்களுக்காக மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்க ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நாமக்கல் நகர்மன்றத் தலைவர் ஆர்.கரிகாலன் தெரிவித்தார்.

நாமக்கல் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், அதிகரித்து வரும் குடிநீர் பற்றாக்குறை குறித்து நகர்மன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியதுடன், பிரச்னையைத் தீர்க்க நகராட்சிக்கு உள்பட்ட 39 வார்டுகளிலும் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதற்கு நகர்மன்றத் தலைவர் ஆர்.கரிகாலன் பதிலளித்து பேசியது:

நாமக்கல் நகராட்சிக்கு குடிநீர் விநியோகிக்க தற்போது 3 குடிநீர்த் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. காவிரி ஆற்றிலிருந்து நீர் எடுத்துவரப்படும் அந்தக் குடிநீர் திட்டங்களுக்காக மோகனூர் பகுதியில் ஆற்றில் 9 கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால், 9 கிணறுகளிலும் தண்ணீர் குறைந்துவிட்டது.

மேலும், மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் விநாடிக்கு 500 கனஅடி தண்ணீரை விவசாயத்துக்கும் பயன்படுத்துவதால் பரமத்திவேலூர் பகுதியிலேயே முடிந்துவிடுகிறது.

இதனால், மோகனூர் பகுதியிலிருந்து குடிநீர் ஆதாரங்களுக்கான தண்ணீர் குறைந்துவிடுகிறது.

இதனால் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறை பிரச்னையை அடுத்து குடிநீர் திட்டங்களுக்காக மட்டும் மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. தவிர, நகராட்சியின் 39 வார்டுகளிலும் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்றார் அவர்.
 

பரமக்குடியில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க ரூ 40 லட்சத்தில் பணிகள்

Print PDF

தினமணி                  09.04.2013

பரமக்குடியில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க ரூ 40 லட்சத்தில் பணிகள்


பரமக்குடி நகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்த காவிரி கூட்டுக் குடிநீரின் அளவு வறட்சியால் குறைவாக கிடைப்பதால் அதை ஈடுசெய்யும் வகையில் கள்ளிக்கோட்டை பகுதியில் உள்ள நீர் ஊறிஞ்சும் கிணறு மற்றும் குடிநீர் குழாய் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வது குறித்து நகர்மன்றத் தலைவர் எம்.கீர்த்திகா ஊழியர்களுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

பரமக்குடி நகருக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு 59 லட்சம் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

தற்போது காவிரியில் போதிய நீர்வரத்து இல்லாததால் அங்குள்ள கிணறுகள் வறட்சியால் நீர் ஊற்று குறைந்துள்ளது.

இதனால் பரமக்குடி நகருக்கு நாள் ஒன்றுக்கு 24 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

மேலும் நகராட்சி பகுதிக்கு குடிநீர் எடுத்த கள்ளிக்கோட்டை பகுதியில் உள்ள 6 நீர் உறிஞ்சு கிணறுகளில் 3 ஏற்கெனவே பழுதடைந்துள்ளன.

நகர் மக்களுக்கு முறையாகக் குடிநீர் வழங்கிட பழுதடைந்த 3 கிணறுகளை சரி செய்திடவும், மின்தடையின்போது தடையின்றி குடிநீர் எடுக்க 50 கே.வி.யுடன் இயங்கக்கூடிய ஜெனரேட்டர் பொருத்திடவும், காட்டுப்பரமக்குடி தோப்பு பகுதியில் புதிதாக ஆழ்குழாய் அமைத்து அங்கிருந்து குடிநீர் விநியோகம்  செய்திடவும், பழுதடைந்துள்ள குடிநீர் குழாய்கள் அப்புறப்படுத்தப்பட்டு கெவி மெட்டலால் தயாரிக்கப்பட்ட குழாய்கள் பொருத்துவது உள்பட அனைத்து பணிகளும் ரூ.40 லட்சம் மதிப்பில் உடனே மேற்கொள்ளப்பட உள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு உடனே தீர்க்கப்படும் என அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது நகராட்சி ஆணையர் கே.அட்ஷயா, பொறியாளர் ஜி.தங்கப்பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர் எம்.ஏ.முனியசாமி மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.

 

மாநகர் நீரேற்று நிலையங்களில் மின் பராமரிப்பு நாளைகுடிநீர் சப்ளை ரத்து

Print PDF
தினகரன்       08.04.2013

மாநகர் நீரேற்று நிலையங்களில் மின் பராமரிப்பு நாளை குடிநீர் சப்ளை ரத்து


திருச்சி: மாநகரில் நீரேற்று நிலையத்தில் மின் பராமரிப்புக்காக நாளை குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி கமிஷனர் தண்ட பாணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாநகராட் சிக்கு உட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப் பணி நிலையம், பெரியார் நகர் நீர்சேகரிப்பு கிணற்று நீரேற்று நிலையம், அய்யாளம்மன் படித்துறை பொன் மலைக் கூட்டுக் குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையம், ஜீயபுரம், பிராட்டியூர் கூட்டுக் குடிநர்த் திட்டநிலையம் ஆகிய இடங்க ளில் உள்ள தலைமை நீரேற்று நிலையங்களுக்காக உள்ள கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (9ம் தேதி) பராமரிப்பு பணி நடக்கிறது.

காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் பணியால் கம்பரசம்பேட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மரக்கடை, விறகுபேட்டை, உறையூர், மலைக் கோட்டை, சிந்தாமணி ஆகிய பகுதிகள்.

பெரியார் நகருடன் இணைக்கப்பட்டுள்ள தில்லைநகர், அண்ணாநகர், புத் தூர், காஜாப்பேட்டை, கன்டோன்மென்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திரு மலை, தெற்கு ராமலிங்க நகர், ஆல்பா நகர், பாத்திமா நகர், கருமண்டபம் மற்றும் காஜாமலை காலனி.

பொன்மலையில் அடங் கும் அரியமங்கலம் பகுதி, மேலகல்கண்டார் கோட் டை, பொன்னேரிபுரம், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், பொன்மலைப்பட்டி, சிறைச்சாலை சுப்பிரமணியபுரம், விமானநிலையம் பகுதி, செம்பட்டு கல்லுக்குழி, காஜாநகர், காஜாமலை, கிருஷ்ணமூர்த்தி நகர், தொண்டை மான் நகர், அன்புநகர்.
பிராட்டியூரில் இணைந்துள்ள ராம்ஜிநகர், பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதூர், கே.கே. நகர், எல்ஐசி கலானி, விசுவநாதபுரம், கே.சாத்தனூர், தென் றல் நகர், விசுவாஸ் நகர், ஆனந்த் நகர், சுப்ரமணிய நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் வராது. 10ம் தேதி வழக்கம் போல் குடிநீர் விநியோகம் இருக்கும். இவ்வாறு கமிஷனர் தண்ட பாணி தெரிவித்துள்ளார்.
 


Page 65 of 390