Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

புதிய குடிநீர் இணைப்பு வழங்க திருப்பூர் மாநகராட்சி ஆயத்தம்

Print PDF
தினமணி       07.04.2013

புதிய குடிநீர் இணைப்பு வழங்க திருப்பூர் மாநகராட்சி ஆயத்தம்


திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட 4-ஆவது மண்டலப் பகுதிகளில் புதிய குடிநீர் இணைப்புக்கு வைப்புத்தொகை செலுத்தியவர்கள், இம்மாதம் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆணையர் கே.ஆர்.செல்வராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

திருப்பூர் மாநகராட்சி, 4-ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட வீரபாண்டி, முருகம்பாளையம், ஆண்டிபாளையம் பகுதிகளில் புதிதாக குடிநீர் இணைப்புப் பெற வைப்புத் தொகை செலுத்தியவர்கள் அதற்கான ரசீது, 2013-14 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி (கட்டடத்துக்கு) செலுத்திய ரசீது நகலுடன் 15 ஆம் தேதிக்குள் 4-ஆவது மண்டல அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

ஏற்கனவே வைப்புத்தொகை செலுத்தப்பட்ட தேதி அடிப்படையில் இந்த விண்ணப்பங்கள் வரிசைப்படுத்தப்பட்டு, மாநகராட்சி குடிநீர் வழங்கல் துணை விதிகளின்படி, கூடுதல் வைப்புத் தொகை செலுத்துவோருக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்றார்.
 

குடிநீர் வினியோகம் நிறுத்தம் பில்லூர் குழாயில் உடைப்பு

Print PDF
தினகரன்       06.04.2013

குடிநீர் வினியோகம் நிறுத்தம் பில்லூர் குழாயில் உடைப்பு


கோவை: பில்லூர் முதல் குடிநீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் நேற்று குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.

பில்லூர் முதல் குடிநீர் திட்டத்தின் மூலமாக கோவை மாநகராட்சிக்கு 6.5 கோடி லிட்டர் குடிநீர் தினமும் வினியோகம் செய்யப்படுகிறது. 22 பேரூராட்சி மற்றும் 534 வழியோர கிராமங்களுக்கு தினமும் 6.1 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தினமும் மொத்தமாக 12.6 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று காலை வையம்பாளையம் பகுதியில் பிரதான குடிநீர் குழாயில் (1500 மி.மீட்டர் விட்டம் கொண்டது) உடைப்பு ஏற்பட்டது. இதில் சுமார் 10 லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகியது. குழாய் உடைந்த தகவல் தெரிந்ததும் பில்லூர் அணையில் நீர் எடுக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து வையம்பாளையத்தில் குழாய் சீரமைக்கும் பணி நடக்கிறது. பணி முடிந்தும் இன்று காலை முதல் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என பில்லூர் குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் இக்பால் தெரிவித்துள்ளார். பில்லூர் அணையில் இருந்து விளாங்குறிச்சி மேல் நிலை நீர் தேக்க தொட்டி வரை 43 கி.மீ தூரத்திற்கு பிரதான குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 25 கி.மீ தூரத்திற்கு இரும்பு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதியில் கான்கிரீட் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. பில்லூர் அணையின் மின் தடை ஏற்படும் போதும், மின் அழுத்தம் குறையும் போதும் குழாயில் நீர் அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் காரணமாக கான்கிரீட் குழாய் விரிசல் விட்டு உடைந்து விடுவதாக தெரியவந்துள்ளது. ஜேசிபி மூலமாக மண்ணை தோண்டி குழாய் உடைப்பை சரி செய்யும் பணி நடக்கிறது.

குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டதால், நகரில் சிங்காநல்லூர், பீளமேடு, கணபதி, ராமநாதபுரம், கண்ணப்பநகர், ரத்தினபுரி, செட்டிபாளையம், வெள்ளலூர், மதுக்கரை, மலுமிச்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்று குடிநீர் வழங்கப்படவில்லை. வையம்பாளையத்திற்கு முன்புள்ள பகுதியில் இருந்து பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்று 10 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. பில்லூர் 2வது குடிநீர் திட்டத்தில் மாநகராட்சி பகுதிகளுக்கு நேற்று வழக்கம் போல் 6.5 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. சிறுவாணி அணையில் இருந்து 2.8கோடி லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்பட்டது.
 

தச்சையில் 5 வார்டுகளில் இன்று குடிநீர் ‘கட்’

Print PDF
தினகரன்      05.04.2013

தச்சையில் 5 வார்டுகளில் இன்று குடிநீர் ‘கட்’


நெல்லை,: தச்சை மண்டல உதவி கமிஷனர் சாமுவேல் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தச்சை மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட சுத்தமல்லி தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வரும் பம்பிங் மெயின் லைனில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், இன்று 1,2,3,4,55 ஆகிய வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ளுங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


Page 66 of 390