Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ஏப்.10 ராமநாதபுரத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் நிறுத்தம்

Print PDF
தினமணி      05.04.2013

ஏப்.10 ராமநாதபுரத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் நிறுத்தம்


ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இம்மாதம் 10 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகள் காரணமாக காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் நிறுத்தப்பட இருப்பதாக ஆட்சியர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திவிபரம்:  காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் தலைமை இடத்தில் மின்தடை மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் நீரேற்றம் நிறுத்தப்படவுள்ளது. ஆகையால்  ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இம்மாதம் 10 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் காவிரி ஆற்று குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

குடிநீரில் கழிவு நீர் கலப்பு பிரச்னைக்கு தீர்வு

Print PDF

தினமலர்                04.04.2013

குடிநீரில் கழிவு நீர் கலப்பு பிரச்னைக்கு தீர்வு


புழல்:குடிநீரில் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசிய பிரச்னைக்கு, சென்னை குடிநீர் வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைத்தனர்.

சென்னை மாதவரம் மண்டலம் 22வது வார்டில் புழல் காவாங்கரை மாரியம்மாள் நகர் பிரதான சாலை, திருநீலகண்டர் நகர், காஞ்சி அருள் நகர், தமிழன் நகர் உள்ளிட்ட நகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக குடிநீர் குழாய் இணைப்புகளில் கழிவு கலந்து துர்நாற்றம் வீசியது.

இதுகுறித்து "தினமலர்' நாளிதழில், செய்தி வெளியானது. இதையடுத்து, மாதவரம் மண்டல பகுதி சென்னை குடிநீர் வாரிய துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, மாரியம்மாள் நகர் பிரதான சாலையில் உள்ள, மழை நீர் வடிகால்வாயுடன், கழிவு நீர் குழாய் இணைப்பு பணியால் அருகில் இருந்த குடிநீர் குழாய் சேதமடைந்தது தெரிந்தது.

அந்த பணியை செய்தவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல், குடிநீர் குழாய் உடைப்பை தற்காலிகமாக சீரமைத்தனர். இதனால் அந்த இடத்தில் ஏற்பட்ட கசிவால் குடிநீரில் கழிவு நீர் கலந்தது தெரியவந்தது. இதையடுத்து சேதமடைந்த குடிநீர் குழாய் அகற்றப்பட்டு, புதிய குழாய் பொருத்தப்பட்டது.

 

கோடை காலத்தில் குடிநீர் தேவையை சமாளிக்க ரூ3.59 கோடியில் திட்டப்பணி ரூ1.18 கோடியில் 5 ஜெனரேட்டர்

Print PDF
தினகரன்       04.04.2013

கோடை காலத்தில் குடிநீர் தேவையை சமாளிக்க ரூ3.59 கோடியில் திட்டப்பணி ரூ1.18 கோடியில் 5 ஜெனரேட்டர்


திருச்சி: கோடை காலம் துவங்கிவிட்டநிலை யில் குடிநீர் தேவையை சமாளிக்க திருச்சி மாநகராட்சி பகுதிகளில் ரூ. 3.59 கோடியில் பணிகள் நடக்கிறது. குறிப்பாக மின்தட்டுப்பாட்டு நேரத்தில் தடையின்றி குடிநீர் தர ரூ. 1.18 கோடியில் 5 ஜெனரேட்டர்கள் வாங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியில் கோடையில் தட்டுப்பாடி ன்றி குடிநீர் வழங்க முதல் வர் ரூ. 3.59 கோடியை வறட்சி நிவாரணத் திட்டத் தில் ஒதுக்கீடு செய்துள் ளார்.

இதன் மூலம் கம்பரசம்பேட்டை தலைமை நீரே ற்று நிலையத்தில் 60 அடி ஆழத்தில் 5 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணிகளும், புதிதாக மின்மோட்டார் மற்றும் மின் கேபிள் ஒயர்கள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இவற்றை மேயர் ஜெயா நேற்று பார்வையிட்டார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

மாநகராட்சியின் பல் வேறு பகுதிகளில் தலா ரூ. 40 ஆயிரம் மதிப்ப¤ல் 50 ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குடிநீர் கைப்பம்புகள் பொருத்தும் பணி நட ந்து வருகிறது. குடிநீர்பற்றாக்குறை உள்ள 50 இடங்களில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி வைத்து லாரிகள் மூலம் குடிநீர் தரப்படும்.

மின்தட்டுப்பாடு ஏற் படும் நேரங்களில் தடை யின்றி குடிநீர் தர 5 புதிய ஜெனரேட்டர்கள் ரூ. 1.18 கோடியில் வாங்கப்பட உள் ளது.

மாநகரில் மாநகராட்சி யின் 11 லாரிகள் மூலமும் 4 வாடகை லாரிகள் மூலமும் குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வறட்சியான காலத்திலும் 92 மில்லியன் லிட்டர் குடிநீர் தட்டுப்பாடின்றி நாள் தோறும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

நவீன கழிப்பிடம்: தமிழகத்திலேயே முதல் முறையாக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் நவீன கழிப்பிடம் அமைக்கப்படுவதையும் மேயர் ஆய்வு செய்தார்.

திருச்சி அம்மா மண்ட பம்-வீரேஸ்வரம் சாலை சந்திப்பில் காவிரி ஆற்றில் சம்மர் பீச்சுக்கு செல்லும் வழ¤யில் இப்புதிய கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கழிவறை 24 மணி நேரமும் பராமரிக்கப்பட உள்ளது. திருச்சி மாநகராட்சியில் அனைத்து பகுதிகளிலும் 2015க்குள் திறந்த வெளி கழிப்பிடங்களை முழுமையாக தடுக்கவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இக்கழிப்பி டம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகளின் போது கோட்டத்தலைவர் கள் லதா, சீனிவாசன், ஞானசேகரன், மாநகராட்சி செயற்பொறியாளர் சந்தி ரன், உதவி ஆணையர் ரங்கராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 


Page 67 of 390