Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ஏற்பாடு

Print PDF
தினமணி        01.04.2013

குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ஏற்பாடு

அரியலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகள் சனிக்கிழமை தொடங்கின.

அரியலூர் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைபம்பு அமைத்தல், வாடகை லாரிகள் மூலம் குடிநீர் விநியோகித்தல், பழுதான கைபம்புகள் பராமரித்தல், தலைமை நீரேற்று நிலையத்தில் பழுதடைந்துள்ள மின் மோட்டார்களுக்குப் பதிலாக புதிய மின் மோட்டார்கள் மற்றும் ஜெனரேட்டர் அமைக்க ரூ. 1 கோடியே 16 லட்சம், திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள நீர் சேகரிப்பு கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறையை சீரமைக்க 2 ஆழ்துளை கிணறுகள் ரூ. 5 லட்சத்தில் அமைக்க நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது.

மேலும், ஆழ்துளைக் கிணற்றுடன் கூடிய கைபம்பு அமைத்தல் பணிக்கு ரூ. 5 லட்சம், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய ரூ. 18 லட்சம், 10 ஆழ்துளை கிணறுகளை சுத்தம் செய்ய ரூ. 50 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அரியலூர் நகராட்சி 5-வது வார்டு கே.கே. காலனியில் ஆழ்துளைக் கிணறுகளை சுத்தம் செய்யும் பணி 23-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து 10 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் சுத்தம் செய்யப்படுகின்றன.

2-ம் கட்டமாக ஆழ்துளை கிணற்றுடன் கூடிய கைபம்பு அமைக்கும் பணி அரியலூர் பெரிய தெருவில் சனிக்கிழமை தொடங்கியது. நகர்மன்றத் தலைவர் முருகேசன் தலைமை வகித்து பணிகளைத் தொடக்கிவைத்தார்.

ஆணையர் சரஸ்வதி, நகராட்சி உறுப்பினர் குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  அரியலூர் நகராட்சியில் உள்ள 10, 18 மற்றும் 13 -வது வார்டுகளில் தலா ஒரு ஆழ்துளைக் கிணற்றுடன் கூடிய கைபம்பு அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் ரூ. 5 லட்சத்தில் 4 இடங்களில் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
 

வீரப்பன்சத்திரம் பகுதியில் நாளைமுதல் இரு நாள்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Print PDF
தினமணி         01.04.2013

வீரப்பன்சத்திரம் பகுதியில் நாளைமுதல் இரு நாள்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்


ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் (ஏப்ரல் 2, 3) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று, மாநகராட்சி ஆணையர் மு.விஜயலட்சுமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் ஞாயிற் றுக்கிழமை வெளியிட்ட செய்தி:

ஈரோடு மாநகராட்சி வீரப்பன்சத்திரம் 16-ஆம் நம்பர் பஸ் சாலையில் நெடுஞ்சாலைத் துறையினரால் மேற்கொள்ளப்படும் பணிக்கு இடையூறாக உள்ள குழாய், மாற்றி அமைக்கப்பட உள்ளதால் 35 முதல் 40 வரையும், 46, 47 மற்றும் 49-ஆவது வார்டுகளில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.
 

நெம்மேலி கடல் குடிநீர்: தென்சென்னையில் விநியோகம் தொடக்கம்

Print PDF
தினமணி              31.03.2013

நெம்மேலி கடல் குடிநீர்: தென்சென்னையில் விநியோகம் தொடக்கம்


நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்திலிருந்து பெறப்படும் குடிநீர் திருவான்மியூர், அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்ட தென் சென்னை பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மீஞ்சூரைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அருகே உள்ள நெம்மேலியில் ரூ.871 கோடி செலவில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் ஜெயலலிதா அண்மையில் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம், திருவான்மியூர், வேளச்சேரி, பள்ளிப்பட்டு மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்கா பகுதிகளில் வசிக்கும் 15 லட்சம் மக்களுக்கு நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்காக 64.37 கிலோ மீட்டருக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. குடிநீர் விநியோகம் செய்யப்படும் பிரதானக் குழாய்களை சுத்தப்படுத்தும் பணிகள் கடந்த வாரம் நிறைவடைந்தது. இதையடுத்து கடந்த சில நாள்களுக்கு முன்பு தென்சென்னை பகுதிக்கு நெம்மேலி கடல் குடிநீர் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

திருவான்மியூர், அடையாறு, பெசன்ட் நகர், இந்திரா நகர், வேளச்சேரி, பள்ளிப்பட்டு, தரமணி, பெருங்குடியில் ஒரு பகுதி, கொட்டிவாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இன்னும் சில நாள்களுக்குள் நெம்மேலியிலிருந்து பெறப்படும் 10 கோடி லிட்டர் குடிநீரும் முழுமையாக விநியோகிகப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் செயல்பட்டு வரும் கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம் மூலம் தற்போது 10 கோடி லிட்டர் குடிநீர் சென்னைக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. குடிநீர் ஏரிகளிலிருந்து பெறப்படும் 83 கோடி லிட்டர் குடிநீர் சென்னை மற்றும் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
 


Page 72 of 390