Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குன்னூரில் குடிநீர் வினியோகத்தில் சிக்கல்

Print PDF
தினமலர்       28.03.2013

குன்னூரில் குடிநீர் வினியோகத்தில் சிக்கல்


குன்னூர்:குன்னூரில் மழை பொய்த்ததால் தண்ணீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.குன்னூர் நகரின் ஒரே குடிநீர் ஆதாரம் ரேலியா அணை. நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளுக்கு இந்த அணையிலிருந்து தான் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்தாண்டு தென் மேற்கு பருவ மற்றும் வட கிழக்கு பருவ மழை பொய்த்து போனதால், அணை முற்றிலும் வறண்டது. நவம்பர் மாதம் புயல் காரணமாக கன மழை பெய்து அணை நிரம்பியது. தற்போது, கோடை காலம் துவங்கியுள்ளதால், அணைக்கான நீர் வரத்து குறைந்து அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. அணையிலிருந்து நீர் சிம்ஸ் பார்க் சேமிப்பு தொட்டியில் நிரப்பபட்டு, அங்கிருந்து ஜிம்கானா நீர் தேக்கத்துக்கு பம்ப் செய்யப்படும். இந்நிலையில், ஜிம்கானா நீர் தேக்கத்தில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வந்தது.

கசிவை கட்டுப்படுத்த நகராட்சி மூலம் தடுப்பணை கட்டப்பட்டது. ஆனால், இந்த தடுப்பணை கட்டப்பட்டு சிறிது காலத்திலேயே உடைந்ததால், தற்போது மீண்டும் தடுப்பணை கட்டும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. ரேலியா அணையில் நீர் இருப்பு வெகுவாக குறைந்துள்ளதால், தண்ணீர் வினியோகிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.நாள்தோறும் காலை 4:00 மணி நேரமும், மதியம் 4:00 மணி நேரமும் தண்ணீர் பம்ப் செய்யப்பட்ட நிலை மாறி, தற்போது நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால்,"நகர் பகுதிகளில் வாரத்துக்கு ஒரு முறை வினியோகிக்கப்பட்டு வந்த தண்ணீர், தற்போது 12 நாட்களுக்கு ஒரு முறை வினியோகிக்கப்படுகிறது' என உள்ளூர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 

வறண்ட வரட்டாறு அணையால் அரூரில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

Print PDF
தினமலர்       28.03.2013

வறண்ட வரட்டாறு அணையால் அரூரில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்


அரூர்: அரூர் அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு அணை தண்ணீரின்றி வறண்டு போனதால், அரூர் நகரப்பகுதிக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரூர் அடுத்த வள்ளிமதுரையில் வரட்டாறு அணை கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்கு கீழ் அமைந்துள்ளது. இந்த அணைக்கு சித்தேரி மலைப்பகுதியிலிருந்து நீர்வரத்து வருகிறது. அணை மூலம், 25 ஏரிகள் நிரம்புகிறது. மேலும், 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேலும், அரூர் நகருக்கு வரட்டாறு அணை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் நீரேற்று நிலையம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது, மூன்று நாட்களுக்கு ஒருமுறை அரூர் நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

கடந்த இரண்டு மாதத்துக்கு முன் வரட்டாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. மொத்தம், 110 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது. 3.34 மில்லியன் கன அடி நீர் மட்டும் இருப்பு உள்ளது.

தற்போது நிலவும் கடும் வறட்சியால், அணையில் நீர் இருப்பு குறைந்து கொண்டே செல்கிறது. மேலும் அணைக்கு நீர்வரத்தும் இல்லை. இதனால் அரூர் நகருக்கு குடிநீர் ஓரிரு மாதங்களுக்கு மட்டுமே வினியோகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வள்ளிமதுரை வரட்டாறு அணைக்கட்டு செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், ""அரூர் நகரின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு அணைக்கட்டில் போதுமான அளவு நீர் இருப்பு, 3.34 மில்லியன் கன அடி உள்ளது. இதனை கொண்டு இரண்டு மாதங்களுக்கு அரூர் நகருக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் பிரச்னை இருக்காது,'' என்றார்.
 

மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம்

Print PDF
தினத்தந்தி        28.03.2013

மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம்


திருப்பூர் மாநகர மக்க ளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய புதிய குடிநீர் திட்டம் செயல் படுத்த மாநக ராட்சி முடிவு செய்து உள்ளது. மேலும் குப்பை யில் இருந்து மின்சாரம் தயா ரிக்கும் திட்டத்துக்கு ரூ.90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

புதிய குடிநீர் திட்டம்

திருப்பூர் மாநகராட்சி பட் ஜெட்டில் புதிய குடிநீர் திட் டம் மற்றும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்த நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று மேயர் ஏ.விசாலாட்சி அறிவித்தார்.

*திருப்பூர் மாநகரில் 3 குடிநீர் திட்டங்கள் மூலமாக மக்களுக்கு குடிநீர் வினி யோகம் செய்யப்பட்டு வரு கிறது. மாநகரின் கூடுதல் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு புதிய குடிநீர் திட் டம் ஒன்றை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதனடிப்படையில் அரசால் புதிய திருப்பூர் பகுதி மேம் பாட்டு கழகம் கலந்தாய்வாள ராக நியமனம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிறுவனம் முன்னுரை, நடுநிலை அறிக்கை முதலியவற்றை தயார் செய்து அதற்கான அனுமதியை பெற்று உள்ளது. தற்போது மாதிரி திட்ட விவர அறிக்கை தயார் செய்யும் பணி நடை பெற்று வருகிறது. வருகிற ஜூலை மாதம் இறுதிக்குள் முழுமையான திட்ட அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் அர சின் நிதி உதவியுடன் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள் ளப்படும்.

*கோடைகாலத்தில் தண் ணீர் பற்றாக்குறையை தவிர்க் கும் வகையில் 179 எண்ணிக் கையில் மின்மோட்டார் பம்பு களுடன் கூடிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும், கூடுதலாக குடிநீர் குழாய்கள் பதிக்கவும் மற்றும் இதர பகிர்மான குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. மாநகராட்சியுடன் புதி தாக இணைக்கப்பட்ட பகுதி களில் சீரான குடிநீர் வினி யோகம் செய்ய கூடுதலாக குடிநீர் வினியோக குழாய்கள் பதிக்கவும், ஏற்கனவே உள்ள சிறிய அளவு குழாய்களை மாற்றவும் ரூ.14 கோடியே 40 லட்சத்தில் நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டு உள்ளது.

குப்பையில் இருந்து மின்சாரம்

* திருப்பூர் மாநகராட்சியில் 2 பஸ் நிலையங்கள், ஒரு தினசரி மார்க்கெட், 2 உழவர் சந்தைகள், ஒரு வாராந்திர சந்தை மற்றும் 192 பொதுக் கழிப்பிடங்கள் உள்ளன. மாநகரில் வீடு வீடாக குப்பை சேகரிக்கும் பணிக்கும், பஸ் நிலையங்கள், தினசரி அங் காடி, உழவர் சந்தை, வாராந்திர சந்தை மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் பராமரிப்புக்கு 1661 துப்புரவு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். திடக் கழிவு மேலாண்மை திட்டத் தின் கீழ் நவீன முறையில் குப்பைக்கழிவுகளை உரக் கிடங்கு அமைத்து அகற்ற நக ராட்சி நிர்வாக ஆணையர் அனுமதி கோரப்பட்டு உள் ளது.

2013-14 ம் நிதியாண்டில் திடக்கழிவு மேலாண்மை திட் டத்தை செயல்படுத்த ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு உள்ளது. மேலும் வாக னங்கள் வாங்க ரூ.2 கோடியும், கூடுதலாக குப்பை சேகர மாகும் கலன்கள் வாங்க ரூ.1 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் 520 மெட்ரிக் டன் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் சேகரமாகின்றன. இதில் சுமார் 40 சதவீதம் மக்கும் குப்பைகளாகும். நன்கு திட்டமிட்டு தொலைநோக்கு பார்வையோடு சிறப்பாகவும், நிரத்தர தன்மையோடும் செயல்படுத்த வேண்டி நீண்ட கால திட்டம் என்பதால் முதல்கட்டமாக 5 டன் கழிவு களை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
 


Page 74 of 390