Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

திருச்செந்தூர்: குடிநீர்க் குழாய் பதிக்கும் பணி துரிதம்

Print PDF
தின மணி             20.02.2013

திருச்செந்தூர்: குடிநீர்க் குழாய் பதிக்கும் பணி துரிதம்


திருச்செந்தூரில் மந்தகதியில் நடைபெற்று வந்த குடிநீர்க் குழாய் பதிக்கும் பணி இப்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் நகரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய குடிநீர்த் திட்டத்தின் கீழ் குரங்கன்தட்டிலிருந்து தனிக்குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட உள்ளது.

இதற்கான குழாய் பதிக்கும் பணி கோவிலுக்குச் செல்லும் சபாபதிபுரம் தெருப்பாதையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இப் பணி கந்தசஷ்டிக்காகப் பாதியில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் சாலையோரம் போடப்பட்ட நீண்ட குழாய்களால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

இவ் வழியே செல்லும் வழக்கமான தடப்பேருந்துகளும், சுற்றுலா வாகனங்களும் மிகுந்த சிரமத்தோடு சென்று வந்தன. இதுகுறித்து தினமணியில் வெளியான செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில் குழாய் பதிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இப் பணி நிறைவு பெறும் பட்சத்தில் திருச்செந்தூர் பகுதி மக்கள் மற்றும் பக்தர்களுக்கு கூடுதலான குடிநீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Last Updated on Thursday, 21 February 2013 12:24
 

கணபதிபுரம் பேரூராட்சியில் குடிநீர்த் தொட்டிப் பணி தொடக்கம்

Print PDF
தின மணி             20.02.2013

கணபதிபுரம் பேரூராட்சியில் குடிநீர்த் தொட்டிப் பணி தொடக்கம்

கணபதிபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட ஆறுதெங்கன்விளைப் பகுதியில் புதிய குடிநீர்த் திட்டப் பணி தொடக்கவிழா நடைபெற்றது.

குடிநீர்த் தொட்டி அமைக்க வேண்டும் என, இப் பகுதி மக்கள் நாஞ்சில் முருகேசன் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று, 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர்த் தொட்டி கட்ட அவர் தனது தொகுதி மேம்பாடு நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

இதையடுத்து நடைபெற்ற விழாவில் அவர் பங்கேற்று தொட்டி கட்டுவதற்கான பணியைத் தொடக்கிவைத்தார்.

கணபதிபுரம் பேரூராட்சித் தலைவர் தாணுலிங்கம், துணைத் தலைவர் கிருஷ்ணகுமார், உறுப்பினர்கள் கலைச்செல்வி, இளங்கோ, அதிமுக ஒன்றியச் செயலர் ராமகிருஷ்ணன், பேரூர் செயலர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 21 February 2013 12:20
 

பத்மநாபபுரம் நகராட்சியில் குடிநீர்த் தொட்டிகள் திறப்பு

Print PDF
தின மணி             20.02.2013

பத்மநாபபுரம் நகராட்சியில் குடிநீர்த் தொட்டிகள் திறப்பு

பத்மநாபபுரம் நகராட்சியில் ரூ. 5 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 4 சிறுமின் விசை குடிநீர்த் தொட்டிகள் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட 8-வது வார்டு, 21-வது வார்டுகளில் ஆழ்துளை கிணறு அமைத்து சிறுமின்விசை மூலம்  சின்டெக்ஸ் தொட்டியில் குடிநீர் நிரப்பி பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து 4 குடிநீர்த் தொட்டிகள் அமைக்க தலா

ரூ. 1.25 லட்சம் வீதம் ரூ. 5 லட்சம் செலவில் சிறுமின் விசை குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டன.

இதையடுத்து மக்கள் பயன்பாட்டுக்கு இந்தக் குடிநீர்த் தொட்டிகளை ஹெலன்டேவிட்சன் எம்.பி. திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர். சத்யாதேவி தலைமை வகித்தார். ஆணையர் மேத்யூ ஜோசப், பொறியாளர் கிரேஸ் அன்ன பெர்லி,  நகர்மன்ற துணைத் தலைவர் பீர்முகமது, நகர்மன்ற உறுப்பினர்கள் ஜிஜாராணி, சசிதரன்நாயர், திமுக நகரச் செயலர் மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 21 February 2013 12:18
 


Page 91 of 390