Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் விநியோகம்: மாநகராட்சி ஆணையர் விளக்கம்

Print PDF
தின மணி             20.02.2013

குடிநீர் விநியோகம்: மாநகராட்சி ஆணையர் விளக்கம்

டி.ஆர்.ஓ. காலனி, ரேஸ்கோர்ஸ் காலனி குடியிருப்புகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக, மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபால் தெரிவித்துள்ளார்.

அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: இப்பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் மேற்கண்ட முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ரேஸ்கோர்ஸ் காலனி குடியிருப்புகளில், பொதுக்குழாய் மூலம் குடிநீர் விநியோகம்  செய்யப்படுகிறது.

டி.ஆர்.ஓ. காலனி, ரேஸ்கோர்ஸ் காலனி குடியிருப்புகளில் வீட்டுவசதி வாரியத்தில்  அமைக்கப்பட்டுள்ள போர்வெல்களில் போதிய தண்ணீர் இல்லை.

இதனால், குடியிருப்புகளுக்கு புழக்கத்திற்குத் தேவையான தண்ணீர் வீட்டுவசதி வாரியத்தில்  விநியோகம் செய்ய இயலவில்லை.

பிப்ரவரி 17 ஆம் தேதி,  ஆட்சியர் முகாமிற்கு பொதுமக்கள் சென்றதற்கு, வீட்டுவசதி வாரியத்தில் போர்வெல்லில் தண்ணீர் விநியோகம் இல்லாதது  காரணமாக இருக்கலாம்.

ஆனால்,  குடியிருப்புகளுக்கு   சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தேவைப்படும் காலங்களில், லாரி மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக, அவர் தெரிவித்துள்ளார்.

Last Updated on Thursday, 21 February 2013 11:58
 

நிலத்தடி நீர் மேலாண்மை குறித்து 2 நாள் பயிற்சி தொடக்கம்

Print PDF
தின மணி                   19.02.2013

நிலத்தடி நீர் மேலாண்மை குறித்து 2 நாள் பயிற்சி தொடக்கம்

காரைக்காலில் நிலத்தடி நீர்  மேலாண்மை குறித்த 2 நாள் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

மத்திய நிலத்தடி நீர் வாரியம், தென்கிழக்கு கடலோர மண்டலம் சென்னை மற்றும் ராஜீவ் காந்தி தேசிய நிலத்தடி நீர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கிராம அளவிலான நிலத்தடி நீர் தாங்கிகளின் மேலாண்மைத் திட்டம் என்ற 2 நாள் பயிற்சியை காரைக்காலில் திங்கள்கிழமை தொடங்கியது.

இப்பயிற்சியில் விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள், பல்வேறு துறையை சார்ந்தவர் என சுமார் 200 பேர் கலந்துகொண்டனர். நிலத்தடி நீர் அடுக்குகளை பற்றிய தகவல்கள் பயனாளிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

நீரடுக்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், அதற்கான உத்திகள் குறித்தும் பயிற்சியாளர்கள் விளக்கிக் கூறினர்.

மத்திய நிலத்தடி நீர் வாரியம், தென்கிழக்கு மண்டல இயக்குநர் இ. சம்பத்குமார் பயிற்சியின் அவசியம் குறித்து பேசினார். காரைக்கால்  கூடுதல் வேளாண் இயக்குநர் க. மதியழகன், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் பி. சுவாமிநாதன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். நிறைவில், டி. ராஜேந்திரன் நன்றி கூறினார்.

2 நாள் பயிற்சியில் மத்திய நிலத்தடி நீர் வாரிய துறை அதிகாரிகள், விஞ்ஞானிகள் பங்கேற்கின்றனர்.

நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை மாணவர்களிடையே நீர் சேமித்தல் மற்றும் பாதுகாத்தல் குறித்த பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, நாடகப் போட்டி நடைபெறவுள்ளது.

Last Updated on Thursday, 21 February 2013 11:51
 

கோடையை சமாளிக்கரூ. 3 கோடியில்குடிநீர்ப் பணிகள்

Print PDF
தின மணி                   19.02.2013

கோடையை சமாளிக்கரூ. 3 கோடியில்குடிநீர்ப் பணிகள்

திருச்சி மாநகராட்சியில் கோடைக்கால குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ. 3 கோடி அரசிடமிருந்து நிதியுதவி பெற்று தேவையான இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதாக மேயர் அ. ஜெயா தெரிவித்தார்.

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தின்போது அவர் இதைத் தெரிவித்தார்.

மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புதிய பகுதிகளில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தில் ரூ. 18 கோடியில் சாலை மேம்பாடு மற்றும் மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 11 கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அது தொடர்பான விவரங்களை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் மேயர் அறிவுறுத்தினார். துணை மேயர் ம. ஆசிக் மீரா, நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, செயற்பொறியாளர் எஸ். அருணாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 


Last Updated on Thursday, 21 February 2013 11:43
 


Page 92 of 390