Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

திருச்சி மாநகரில் இன்று குடிநீர் சப்ளை ரத்து

Print PDF
தினகரன்      04.09.2012

திருச்சி மாநகரில் இன்று குடிநீர் சப்ளை ரத்து

திருச்சி, : திருச்சியில் பெரும்பாலான பகுதிகளில் இன்று குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது. எனவே குடிநீர் நீரேற்று நிலையங்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் மரக்கடை, விறகுபேட்டை, உறையூர், மலைக்கோட்டை, சிந்தாமணி, தில்லைநகர், அண்ணாநகர், புத்தூர், காஜாப்பேட்டை, கண்டோன்மெண்ட், ஜங்சன், உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகர், ஆல்பா நகர், பாத்திமா நகர், கருமண்டபம், காஜாமலை காலனி, அரியமங்கலம், மேலகல்கண்டார்கோட்டை. பொன்னேரிபுரம், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், பொன்மலைப்பட்டி, சுப்பிரமணியபுரம், ஏர்போர்ட், செம்பட்டு, கல்லுக்குழி, காஜாநகர், காஜாமலை, கிருஷ்ணமூர்த்தி நகர், தொண்டைமான் நகர், அன்புநகர், ராம்ஜிநகர், பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதூர், கே.கே.நகர், எல்ஐசி காலனி, விஸ்வநாதபுரம், கே.சாத்தனூர், தென்றல் நகர், விஸ்வாஸ் நகர், ஆனந்த் நகர், சுப்பிரமணிய நகர் ஆகிய பகுதிகளில் இன்று குடிநீர் விநியோகம் இருக்காது. நாளை முதல் வழக்கம்போல் விநியோகிக்கப்படும். இவ்வாறு கமிஷனர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.
 

ரூ.5லட்சத்தில் குடிநீர் வசதி

Print PDF

தினகரன்             03.09.2012

ரூ.5லட்சத்தில் குடிநீர் வசதி

உடுமலை, :  உடுமலை அருகே உள்ள சங்கராமநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ருத்ராபாளையம், குப்பம்பாளையம், சமத்துவபுரம், ஆத்தூர், புதுநகரம், நல்லண்ணகவுண்டன்புதூர், மடத்தூர், மயிலாபுரம் கிராமங்களில் அமராவதி கூட்டு குடிநீர் திட்டத்தின் தினசரி 10 லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

ஆனால் குப்பம்பாளையம் கிராமத்துக்கு சரிவர குடிநீர் கிடைக்கவில்லை. இங்கு 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து, இந்த கிராமத்துக்கு மட்டும் ருத்ராபாளையம் அமராவதி ஆற்றங்கரையில் இருந்து தனி பைப் லைன் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

பேரூராட்சி சார்பில் ரூ.5 லட்சம் செலவில் தனி குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும், குப்பம்பாளையத்துக்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் என பேரூராட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

ஆழ்துளை கிணறு மூலம் நீர் விநியோகம்: கம்பம் நகராட்சி தீர்மானம்

Print PDF

தினமணி                     03.09.2012

ஆழ்துளை கிணறு மூலம் நீர் விநியோகம்: கம்பம் நகராட்சி தீர்மானம்

கம்பம்,செப். 2: கோடைக் காலத்தில் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க, கம்பம் நகராட்சியில் 33 வார்டுகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, மினி பவர் பம்ப் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய ரூ. 34 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கான தீர்மானம் நகராட்சியில் நிறைவேற்றப்பட்டது. கம்பம் நகராட்சிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. டி.சிவக்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம். அபுதாகீர், ஆணையாளர் சி. சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள்:
 
சக்திகுமார்: நகரமைப்பு பிரிவில் பிளான் அப்ரூவல் பணி தாமதமாக நடைபெறுகிறது.

தலைவர்: பணி துரிதமாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்.

செல்வமணி: பிறப்பு, இறப்புச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு தராமல் இழுத்தடிக்கின்றனர்.

சுகாதார ஆய்வாளர் ஜெயராமன்: பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள், விவரங்களைச் சரியாக கொடுத்தால் சான்றிதழ் காலதாமதமின்றி வழங்கப்படும்.

கே.வாசு: நகரில் புதிய அபிவிருத்தி குடிநீர் திட்டம் ரூ. 18 கோடியில் செலவு செய்யப்பட உள்ள நிலையில், மேலும், புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதே.

தலைவர்: கம்பம் நகருக்கு லோயர்கேம்பிலிருந்து புதிய குடிநீர்த் திட்டம் ரூ. 18.80 லட்சத்தில் துவங்கப்பட உள்ளது.

லோயர்கேம்பில் தண்ணீர் வராத காலங்களில், சுருளிப்பட்டி முல்லைப் பெரியாற்றில் இருந்து, உறைக் கிணறு அமைத்து நகருக்கு குடிநீர் விநியோகம் செய்ய ரூ. 2.25 லட்சத்தில் திட்டம் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பின்னர், நகராட்சியின் 33 வார்டுகளிலும் ரூ. 34 லட்சம் மதிப்பீட்டில் 33 ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, அதில் மினி பவர் பம்ப் பொருத்தி தண்ணீர் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகராட்சிப் பொறியாளர் மணிமாறன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 


Page 94 of 390